இனி இவி வாகனங்கள் வாங்குவது சிக்கல் போலயே.. நிறுத்தப்படும் சலுகைகள்.. ஒரே விலைதான்.. கட்கரி ஷாக்
சென்னை: அடுத்த ஆறு மாதங்களுக்குள் மின்சார வாகனங்களின் (EV) விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
உலகம் முழுக்க மக்கள் இடையே EV கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மோகத்திற்கு பின்னணியில், மார்க்கெட் மாறியதே காரணம். உலகம் முழுக்க வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இவி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கின்றன.

இந்தியாவிலும் கூட கடந்த வருடம் வரை இவி வாகனங்களை வாங்க வரி விலக்கு, சலுகைகள், நிதி உதவிகள் கூட வழங்கப்பட்டு வந்தன. இது போக காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐநா பல நாடுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு இவி வாகனங்கள் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் போக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் காலியாக தொடங்கி உள்ளது. உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் அடைந்து உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை உலக நாடுகள் பல வாங்குவது இல்லை. இப்படி பல காரணங்களால் இவி வாகனங்கள் அதிகம் விற்கப்படுகிறது.
இந்தியாவில் மாற்றம்
ஆனால் இந்தியாவில் இவி வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவி வாகனங்களுக்கு நிறைய வரி சலுகைகள் கொடுக்கப்பட்டன. இது போன்ற சலுகைகள் வேகமாக குறைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மின்சார வாகனங்களின் (EV) விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது. வாகனங்கள் வெளியேற்றும் மாசுபாட்டின் அடிப்படையில் வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
நாடு முழுக்க தற்போது 15 வருட பழைய வாகனங்களை அகற்ற கொள்கை உள்ளது. இதை தீவிரமாக கடைபிடிக்கவில்லை என்றாலும்.. 15 வருட பழைய வாகனங்களுக்கு எப்சி கிடைக்காது. இந்த நிலையில்தான் வாகனங்கள் வெளியேற்றும் மாசுபாட்டின் அடிப்படையில் வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
வாகனங்களின் வயதை அடிப்படையாகக் கொண்டிருக்க இந்த புதிய விதி உருவாக்கப்படவில்லை என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளன. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் (SIAM) வருடாந்திர மாநாட்டில் பேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் அனுராக் ஜெயின், இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இனிமேல் வாகனங்களை அதிக மாசுடன் இயக்க முடியாது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்கிராப்பிங் கட்டாயம் என்ற கொள்கை இருப்பதால் மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நான் எனது வாகனத்தை நன்றாகப் பராமரித்திருந்தால், எனது வாகனத்தை ஏன் ஸ்கிராப் செய்ய விரும்புகிறீர்கள்? நல்ல வாகனத்தை நான் ஏன் அகற்ற வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது.
இவி வாகனங்கள்
இப்படிப்பட்ட நிலையில்தான் இவி வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் மாற தொடங்கி உள்ளன. தற்போது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப், மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
டிரம்ப்பின் இந்த உத்தரவு காரணமாக பின்வரும் மாற்றங்கள் வரும்; உலக அளவில் டீசல் வாகனங்கள் மீண்டும் அதிகரிக்கும். இவி வாகனங்கள் நீண்ட காலம் உழைப்பது இல்லை. அதோடு செமி கன்டெக்டர் உற்பத்தி கடினம், செலவு அதிகம். இவி வாகனங்கள் அடிக்கடி தீ பிடிக்கும் பிரச்சனையை கொண்டு உள்ளதால் அதன் விற்பனை குறையும். இந்தியாவில் இவி வாகனங்களுக்கான சலுகை நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் பலரும் டீசல் வாகனங்கள் பக்கம் மறுபடியும் செல்வார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications