21 கிமீ.. சென்னையை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும்.. பிக் ப்ராஜெக்ட்.. இந்த வீடியோவை.. பாருங்க
சென்னை: சென்னை துறைமுக மதுரவாயல் பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளின் சமீபத்திய நிலை எப்படி உள்ளது என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரடியாக களத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுவாரசிய கட்டுமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
11 ஆண்டுகளாக முடங்கியிருந்த சென்னை துறைமுகம் - மதுரவாயல் பாலம் கட்டும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்களின் பலத்தை சோதித்து, அவற்றைப் புதுப்பித்து நவீன தொழில்நுட்பத்தில் மறுவடிவமைப்பு செய்து வருகின்றனர்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பாலம்
தூண்களின் உறுதித்தன்மை சோதிக்கும் பணிகள் முடிந்த நிலையில், தற்போது மறுவடிவமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கூவம் பகுதிகளில் ஏற்கனவே இரண்டு அடுக்கு பாலமும் கட்டப்பட்டுவிட்டது. முந்தைய ஆட்சியில் பல ஆண்டுகளாகத் தூண்கள் அமைக்கப்படாமல் தேக்கமடைந்திருந்த நிலையில், தற்போதைய நிலையில் பணிகள் விரைவாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 21 கி.மீ. நீளமுள்ள சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியாக, வானகரத்தில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மதுரவாயலையும் தாண்டி சில பகுதிகளில் இரட்டை அடுக்கு பாலங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 19.8 கி.மீ. நீள இரட்டை அடுக்கு உயர்மட்ட விரைவுச்சாலைத் திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரைவுச்சாலையின் கீழ் அடுக்கில் ஏழு ஏறுதளங்களும், ஆறு இறங்குதளங்களும் அமைக்கப்பட உள்ளன. இது வாகனங்கள் எளிதாகச் சென்றுவர உதவும். குறிப்பாக, இதன் மேல் அடுக்கு கனரக வாகனங்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் பணிகள் தீவிரம்
இந்த 20.6 கிலோ மீட்டர் நீள பாலத்தில் மொத்தம் ஏழு நுழைவுப் புள்ளிகளும், ஆறு வெளியேறும் புள்ளிகளும் இருக்கும். வெவ்வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் ஏழு இடங்களில் நுழைய முடியும். முக்கிய இடங்களில் இந்த இணைப்புகள் அமையும். அதேபோல், இரட்டை அடுக்கு பாலத்தில் இருந்து வெளியேற ஆறு இடங்களில் வழிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டன. 20.9 கி.மீ. தூர துறைமுகம்-மதுரவாயல் வழித்தடத்திற்காக இந்த கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை 200 மீட்டர் நிலத்தை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளின் சமீபத்திய நிலை எப்படி உள்ளது என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரடியாக களத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுவாரசிய கட்டுமான விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த கட்டுமான பணிகள் தொடர்பான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications