கோவைக்கு பிறந்தது விடிவுகாலம்.. கரூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே.. வருகிறது பிரம்மாண்ட திட்டம்
கோவை: கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான எக்ஸ்பிரஸ் வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது.
வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாக பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டத்தை முன்வைத்தது. இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், டிபிஆர் தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் குழு ஒன்று கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்கு பலமுறை சென்று டிபிஆர் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
டிபிஆர் தயாரிக்கும் பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அதை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. இது பின்னர் NHAI தலைமையகத்திற்கு அனுப்பப்படும். இது ஆறு வழி நெடுஞ்சாலையாக இருக்கும். அதேபோல் தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் சாலைகள் இருக்கும்.
ரூர் மற்றும் கோவை இடையே தற்போதுள்ள நெடுஞ்சாலைக்கு இணையாக கூடுதலாக இரண்டு லேன்களை இந்த சாலை கொண்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திட்டத்திற்கு தேவையான நிலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரைவு திட்டத்தின்படி , இதற்கு 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்.
திட்டத்திற்கு NHAI ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை தொடங்கும். திட்டத்திற்கான இறுதி அனுமதி மற்றும் மதிப்பீடு மே 2024 க்குப் பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி: இது போக சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ்வேகள், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது.
சென்னை-திருச்சி விரைவுச்சாலை 310 கி.மீ நீளமும், பிள்ளையார்பட்டி-தூத்துக்குடி வழித்தடம் 160 கி.மீ நீளமும் இருக்கும். இதை சேர்த்து மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
ஏற்கனவே அங்கே அமைக்கப்பட்டு உள்ள 4 வழி சாலை பகுதியில் கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது 8 வழி சாலையாக மாற்றப்படும் என்று தகவல்கள் வருகின்றன. தற்போது இங்கே பயண நேரம் 5. 55 மணி நேரமாக உள்ளது. இது 4 மணி நேரத்திற்கு கீழ் குறையும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணிகள் நடக்க உள்ளன.
-
தேசிய நெடுஞ்சாலைகளில் விஐபி கலாச்சாரம் ஒழியும்! அதிகாரிகளுக்கு சுங்கக்கட்டண விலக்கு ரத்து! திட்டம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications