கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம்
சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் 'மெகா' திட்டமான சென்னை போர்ட் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் இப்போது ஜெட் வேகத்தில் பறக்கத் தொடங்கியுள்ளன. 2027 நவம்பருக்குள் இந்தப் பாலத்தில் வாகனங்கள் சீறிப்பாயும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதிரடி அப்டேட் கொடுத்துள்ளது.

கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை!
மொத்தம் 21 கி.மீ நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட மேம்பாலத்தின் பெரும் பகுதி, அதாவது 15 கி.மீ தூரம் கூவம் ஆற்றின் படுகையிலேயே அமையவிருக்கிறது. இதற்காக செம்பரம்பாக்கத்தில் உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், ராட்சத 'பாக்ஸ் கிர்டர்கள்' (Box Girders) தயாரிக்கும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.
அரசு கொடுத்த 'கிரீன் சிக்னல்'
"தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தற்போது தினசரி 11 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை 16 மணி நேரமாக உயர்த்த அரசு உறுதி அளித்துள்ளது. இதனால், குறிப்பிட்ட காலக்கெடுவான நவம்பர் 2027-க்குள் பணிகளை எங்களால் முடிக்க முடியும்," என NHAI சென்னை மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏன் இந்த பாலம் ஸ்பெஷல்?
ஈரடுக்கு வசதி: கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகத்திற்குச் செல்லும் கனரக வாகனங்களும் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேர சேமிப்பு: கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும்.
பொருளாதார வளர்ச்சி: சென்னை துறைமுகத்திற்கான சரக்கு போக்குவரத்து எந்தத் தடையுமின்றி விரைவாக நடக்கும்.
இந்த ஈரடுக்கு மேம்பாலம் சென்னையின் இதயப்பகுதிக்கும் மேற்குப் பகுதிக்கும் இடையே ஒரு மிகச்சிறந்த போக்குவரத்து பாலமாக அமையப்போகிறது. இந்தத் திட்டம் சென்னையின் முக்கிய இடங்களான எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளின் வழியாகக் கடந்து செல்கிறது.
இணைக்கும் முக்கியப் பகுதிகள்:
இந்த 21 கி.மீ நீளப் பாதை சென்னைத் துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயிலில் (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி, கூவம் ஆற்றின் கரையோரமாகப் பயணித்து கோயம்பேடு வரை செல்கிறது. அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மதுரவாயல் சந்திப்பில் முடிவடைகிறது.
உள்ளூர் மக்கள் பயன்பெறும் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள்:
நகர மக்கள் போக்குவரத்து நெரிசலின்றிப் பயணிக்க, கீழ் அடுக்கில் 13 இடங்களில் சாய்வுதளப் பாதைகள் (Ramps) அமைக்கப்படுகின்றன. இதில் முக்கியமானவை:
சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை (நுழைவுப் பாதைகள்)
காமராஜர் சாலை மற்றும் ஸ்பர் டேங்க் சாலை (வெளியேறும் பாதைகள்)
மேலும் பின்னி சாலை, அமைஞ்சிகரை, அரும்பாக்கம், மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களிலும் மக்கள் இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்தத் திட்டம் முழுமையடையும்போது, அண்ணா சாலை, ஈ.வெ.ரா பெரியார் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் சுமார் 25% போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைவாசிகளின் நீண்ட கால கனவுத் திட்டமான இது, இன்னும் சில ஆண்டுகளில் நனவாகப் போகிறது. கூவம் ஆற்றின் அழகை (மறுசீரமைப்புக்குப் பின்!) ரசித்தபடி, நெரிசலில் சிக்காமல் மதுரவாயலில் இருந்து போர்ட் சென்றடையும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்போம்!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications