6 வருட தாமதம்! நிதின் கட்கரி வந்த நேரம்.. சென்னைக்கு வருது புது ஹைவே! எங்கே இருந்து தெரியுமா?
சென்னை: சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி வழியாக செல்பவர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. இத்தனை காலம் அந்த சாலையில் லேன் மாறி மாறி.. பலர் பயணம் செய்து இருப்பார்கள். இந்தியாவில் இருக்கும் மோசமான சாலைகளில் ஒன்றாக அந்த சாலை திகழ்ந்து வந்தது. தற்போது அந்த கொடூரத்திற்கு முடிவு கட்டப்பட உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய்விற்கு பின் இங்கே நடக்கும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தது கவனம் பெற்றுள்ளது.

இதனால் இத்திட்டம் தேவையான உந்துதலைப் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இத்திட்டம் டெல்டா பகுதிக்கான முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை கொடுக்கும். விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய வழித்தடமாக அமையும்.
செப்டம்பர் 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டம் இப்போது வரை முடிக்கப்படவில்லை. கஜா புயல், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிதி ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழு திட்டமும் தாமதமானது என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. முக்கியமாக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் இந்த சாலை அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் முதல் சோழபுரம் மற்றும் சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான திட்டத்தின் இரண்டு தொகுப்புகளில் சுமார் 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற தொகுப்பின் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு புதிய டெண்டருக்கு செல்ல NHAI முடிவு செய்திருந்தது. கூடிய விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நான்கு வழிச்சாலை கொண்ட சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவு 48 கி.மீ. நீளம் கொண்டது. இதில் இரண்டு பைபாஸ் பிரிவுகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 15 வாகன சுரங்கப்பாதைகள்/மேம்பாலங்கள் உள்ளன. சேத்தியாத்தோப்-சோழபுரம் பிரிவு சுமார் 50 கி.மீ தூரத்திற்கு இயங்குகிறது, இதில் மூன்று புறவழிச்சாலைகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 20 VUPகள்/மேம்பாலங்கள் உள்ளன.
அமைச்சரின் ஆய்வும், திட்டம் குறித்த உறுதிமொழியும் கும்பகோணம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாள் இந்த திட்டம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இத்திட்டத்தை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான நெடுஞ்சாலைப் பகுதி முழுமையாகப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து மற்ற தொகுப்புகளும் விரைவாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம் என்று அப்பகுதி மக்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
சென்னை சாலை: இது போக சென்னை உள்ளே போக்குவரத்து நெரிசலை குறைக்க.. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழியாக சாலையாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுப்பள்ளி துறை முகத்தை மனதில் வைத்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே 100 அடி சாலை, இருளியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலூர் - மீஞ்சூர் இடையே சென்னை புறவழிச்சாலை உட்பட பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சரக்கு லாரிகள் முதல் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த சாலைகள் 24 மணி நேரமும் டிராஃபிக்கில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணவே தற்போது 10 வழி சாலை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
-
டிரைவிங் லைசென்ஸ் வயது வரம்பு மாற்றம்! ஆன்லைன் சேவைகள், RTO அலைச்சல் முடிவுக்கு வருகிறது- புது ரூல் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications