ஜனவரி முதல் அனைத்து வாகனங்களிலும்.. ஆண்டி லாக் பிரேக்கிங் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு
சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் விற்பனை ஆகும் வாகனங்கள் அனைத்திற்கும் ABS பிரேக் சிஸ்டம் கண்டிப்பாக அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கோரிக்கைகள் வைத்தன.

ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்த விதிமுறை எஞ்சின் திறன் பாராமல் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.
ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்
மேலும், இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க இரண்டு தரமான தலைக்கவசங்களை (ஹெல்மெட்) உற்பத்தியாளர்கள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, "2026 ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து மாடல் L2 வகை வாகனங்களும் IS14664:2010 தரநிலைக்கு இணங்க ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்
ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்பது திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் பூட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இது வாகனங்கள் சறுக்குவதையும், விபத்துக்குள்ளாவதையும் கணிசமாகக் குறைக்கிறது.
அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த 1,51,997 சாலை விபத்துக்களில் கிட்டத்தட்ட 20% இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆட்டோமொபைல் விதிகள்
அதேபோல் சாலை விதிமீறல்களை தடுக்கும் விதமாக ஓட்டுநர் உரிமங்களுக்கு 'எதிர்மறை புள்ளிகள் முறையை' அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நெகட்டிவ் பாயிண்ட்ஸ் முறை.
பல நெகட்டிவ்புள்ளிகளைப் பெறும் ஓட்டுநர்களின் உரிமை இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படும். அதாவது நீங்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள், சீட் பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு நெகட்டிவ் புள்ளி வழங்கப்படும்.
இப்படி உங்கள் தவறுகளுக்கு ஏற்ப உங்களுக்கு நெகட்டிவ் புள்ளிகள் வழங்கப்படும். இந்த நெகட்டிவ் புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட மதிப்பை தாண்டும் போது உங்கள் லைசன்ஸ் இடைக்காலமாக நீக்கம் செய்யப்படும். விதி மீறல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.
விதிகள் சொல்வது என்ன?
ஏற்கனவே நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. இது மத்திய அரசின் பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இந்த அபராதங்கள் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
1. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ₹1,000 முதல் ₹1,500 வரை இருந்தது. புதிய விதிகளின்படி, குற்றவாளிகளுக்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால்
அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மூன்று மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்.
3. சீட் பெல்ட் அணியாதது
சீட் பெல்ட்டைக் அணிய தவறினால் இனி ₹1,000 அபராதம் விதிக்கப்படும், இது முந்தைய ₹100ஐ விட பத்து மடங்கு அதிகமாகும்.
4. வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது
வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் இதற்கு முன்பு ₹500 அபராதம் விதிக்கப்பட்டது, இனி அபராதம் ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகளுக்கு நெகட்டிவ் பாயிண்ட்ஸ் வழங்கப்படும்.
-
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications