உலகிலேயே மிக பாதுகாப்பான வால்வோ XC90 கார்! எப்படி விபத்தில் சிக்கியது? இந்தியாவை உலுக்கிய 6 பேர் பலி
பெங்களூர்: பெங்களூரில் சமீபத்தில் வால்வோ என்ற கார் விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வோல்வோ எஸ்யூவி விபத்துக்குள்ளானதில் பெங்களூரு ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ஒன்றின் நிறுவனர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் பலியானார்.
கார் பாதுகாப்பில் உலகிலேயே நம்பர் 1 என்று கருதப்படும் வால்வோ XC90.. உலகிலேயே பாதுகாப்பான கார் என்று சொல்லப்படும் அந்த கார் டிசம்பர் 21 காலை நெலமங்களா-தும்கூர் நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளானது. கண்டெய்னர் லாரியால் நசுக்கப்பட்ட நிலையில் காரில் இருந்த எல்லோரும் பலியானார்கள்.

IAST சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் CEO, சந்திரம் யெகாபகோல், 48, அவரது மனைவி கவுராபாய், 42, மகன் கியான், 16, மகள் தீக்ஷா, 12, மைத்துனர் விஜயலட்சுமி, 36, மற்றும் விஜயலட்சுமியின் மகள் ஆர்யா, 6, ஆகியோர் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த காரை 4 மாதங்களுக்கு முன்புதான் வாங்கி உள்ளனர்.
இந்த நிலையில்தான் காரில் இவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர் . செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டு மொத்த குடும்பமும் பலியாகி உள்ளது. சரி இந்த விபத்து எப்படி ஏற்பட்டு உள்ளது.. உலகிலேயே நம்பர் 1 என்று கருதப்படும் வால்வோ XC90 எப்படி விபத்துக்கு உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
விபத்து எப்படி நடந்தது?
மகாராஷ்டிர மாநிலம் சாங்லிக்கு குடும்பத்துடன் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் ஓட்டுநர் வாகனம் ஓட்டினார் என்றும், அவர் தவறு செய்யவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அந்த கார் ஓரமாக நின்றுள்ளது. அப்போது அதே சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரிக்கு எதிரே இன்னொரு லாரி வர.. இந்த லாரி ஓரம் ஒதுங்கி உள்ளது. அப்போது லாரி தடுமாறி நிலைகுலைந்து உள்ளது. இதில் லாரி சாய்ந்து அப்படியே கார் மீது படுத்தது.
எதிரே இருந்த வாகனங்கள் மீது மோதாமல் இருக்க லாரியை நிறுத்தி உள்ளார். அந்த லாரி பிரேக் போட்ட உடன் தள்ளாடி அப்படியே சாய்ந்து உள்ளது. அந்த லாரியின் எடை 10 டன் ஆகும். உள்ளே அவ்வளவு சரக்கு இருந்துள்ளது . இதனால் லாரி விழுந்ததும் கார் அப்படியே நசுங்கியது.
அவசரமாக வாகனம் ஓட்டியதற்காகவும், அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தியதாகவும் லாரி ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பாதுகாப்பான கார்:
கார் பாதுகாப்பில் உலகிலேயே நம்பர் 1 என்று கருதப்படும் வால்வோ XC90.. உலகிலேயே பாதுகாப்பான கார் என்று சொல்லப்படும் அந்த கார் டிசம்பர் 21 காலை நெலமங்களா-தும்கூர் நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளானது. இதில் கார்பன் பைபர் கூட பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அதிகபட்சம் 500 கிலோ எடையை கூட மேலே விழுந்தால் தாங்கும். ஆனால் வால்வோ XC90 அன்று சந்தித்தது கிட்டத்தட்ட 10 டன். எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அதற்கு ஒரு அளவு இருக்கும். அந்த எல்லையை மீறியதே அந்த அன்று கார் நசுங்க காரணம்.
இந்த கார் உலகில் இதுவரை 10க்கும் குறைவான முறையே விபத்தில் சிக்கி உள்ளது. அதில் 1 முறை மட்டுமே இதற்கு முன் பயணிகள் காயம் அடைந்துள்ளனர். இதுவரை யாரும் பலியாகவில்லை. பெங்களூரில் ஏற்பட்ட மரணமே வால்வோ XC90 காரில் ஏற்பட்ட முதல் விபத்து மரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications