Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி சந்தித்த 4 நாட்களில்.. ஆட்களை எடுக்க தொடங்கிய மஸ்க்.. தமிழ்நாட்டை நோக்கி வரும் டெஸ்லா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் நேரடியாக உற்பத்தியை மேற்கொள்ள டெஸ்லா நினைக்கலாம் என்று கூறப்படுகிறது. டெஸ்லா உற்பத்தி மையம் தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று இருந்தார் . இந்த பயணத்தில் அவர் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை சந்தித்து இருந்தார். இந்த நிலையில்தான் டெஸ்லா முதலீடு இந்தியாவிற்குள் வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

automobile tesla elon musk

ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. இந்தியா மற்றும் பல்வேறு தெற்காசிய நாடுகளில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்காக ஆசியாவில் உற்பத்தி செய்ய அவர் திட்டமிட்டு வருகிறார். சீனாவின் உற்பத்தியை மேலும் பெருக்க அவர் விரும்பாத நிலையில் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. அதன்படி 2 மில்லியன் டாலருக்கு வாகனம், செமி கான்டெக்ட்டர் என்று பல்வேறு உற்பத்திகளை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செய்ய உள்ளது.

மின்சார வாகனங்கள்: உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.

அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இ வாகனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் அனைத்திற்கும் இலவச பர்மீட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பேட்டரி மூலம் இயக்கப்படும் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும், மெத்தனால் அல்லது எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் பயணிகள் வாகனங்களுக்கும், போக்குவரத்து துறையின் பர்மீட் கட்டணமின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வரும் மின்சார சுற்றுலா வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.

சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாயிண்ட் இயங்கும்.வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலீடு: இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டு அதற்கான சலுகைகளையும் உடனுக்குடன் அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வழியாக டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழிற்துறை அதிகாரிகள் தீவிரமான ஆலோசனைகளை செய்து வருவதாகவும் தொழிற்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலோர மாநிலங்கள்: கடலோர மாநிலங்களை இதற்காக டெஸ்லா கவனித்து வருகிறதாம். பல்வேறு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக டெஸ்லாவின் கிகா தொழிற்சாலையை இந்தியாவின் எதாவது ஒரு கடலோர சிட்டியில் அமைக்க டெஸ்லா ஆலோசனை செய்து வருகிறது. இப்போதைக்கு சென்னை, குஜராத், தெலுங்கானா ஆகியவை டெஸ்லாவின் லிஸ்டில் உள்ள பகுதிகள் ஆகும். இவற்றில் ஒன்றை டெஸ்லா டிக் செய்ய வாய்ப்புகள் உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+