மகிந்திரா 3XO கார் வாங்க போறீங்களா? டிசம்பர் 31-க்குள்ள புக் பண்ணிடுங்க!
டெல்லி: மகிந்திரா நிறுவனமானது ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களின் விலை உயர்த்த போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனால் மகிந்திரா காரை அடுத்த ஆண்டு வாங்கலாம் என திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த அறிவித்துள்ளன. அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனம் தான் தயாரிக்கும் கார்களின் விலையை ரூ 25 ஆயிரம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

மூலப் பொருட்களின் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி கார்களின் விலை அதிகரிப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அது போல் மாருதி சுசுகியும் ஜனவரி 2025 ஆம் ஆண்டு முதல் தங்கள் வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா உள்ளிட்ட மாடல்களுக்கும் விலை உயரும். மாருதி சுசுகி மட்டுமல்லாமல் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், டொயோட்டா உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. அந்த வரிசையில் மகிந்திரா கார் நிறுவனமும் விலையை உயர்த்துகிறது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தவிருப்பதாக மகிந்திர தெரிவித்துள்ளது. அந்த வகையில் மகிந்திராவின் XUV 3XO, பெலிரோ, நியோ, தார், பொலிரோ நியோ பிளஸ், ஸ்கார்பியோ, மராஸோ உள்ளிட்ட கார்களின் விலைகள் உயர்த்தப்படுகின்றன.
பயணிகள் கார்கள் மட்டுமின்றி தாங்கள் விற்பனை செய்து வரும் சரக்கு வாகனங்களின் விலையையும் உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது மகிந்திரா. கடந்த நவம்பர் மாத இறுதியில் புதிதாக XEV 9e, BE 6e ஆகிய இரு எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த புதிய கார்களின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. இந்த கார்களின் தொடக்க வேரியன்ட்களின் விலையை மட்டுமே மகிந்திரா தற்போதசு அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஒவ்வொரு காரின் விலையிலும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலை உயர்வு இருக்கும் என்பதால் கார் வாங்க நினைப்பவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வாங்கினால் பணம் மிச்சமாகும்.
மகிந்திரா 5XUV 3XO 3,990 மி.மீ. நீளம் கொண்டது, 1647 மி.மீ, உயரம் கொண்டது. இந்த கார்களில் பல்வேறு safety features இருப்பதால் இந்த காரை பலர் விரும்புகிறார்கள். இதில் 8 வண்ணங்கள் வருகின்றன. சுமார் 13 லட்சம் ஆகும். அலாய் பிரேக், அலாய் வீல் கொண்டது. இந்த வாகனத்தில் பயணிக்கும் போது எந்த அலுப்பும் தெரிவதில்லை. மேலும் இதில் பிரேக்கும் மிகவும் ஸ்மூத்தாக இருப்பதாக சொல்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications