சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்.. செய்யப்பட்ட முக்கிய மாற்றம்.. இனி வாகன ஓட்டிகள் பறக்கலாம்
சென்னை: இந்தியா முழுக்க சாலைகளில் இருக்கும் பிளாக் ஸ்பாட்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 இடங்களில் பிளாக் ஸ்பாட்கள் அகற்றப்பட்டு உள்ளன.
பொதுவாக சாலைகளில் பயணம் செய்கையில் பிளாக் ஸ்பாட்கள் விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கும். சாலைகளில் திடீரென உள்ள தடங்கல்கள். ஒரு சில இடங்களில் இருக்கும் தடுப்புகள் அல்லது சாலைகளில் ஆங்காங்கே இருக்கும் திடீர் வளைவுகள் இப்படி பிளாக் ஸ்பாட்டுகளை ஏற்படுத்தும்.

இது போன்ற சாலைகள்தான் அதிக விபத்துகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டிலும் தொப்பூர் கணவாய், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் இது போல பிளாக் ஸ்பாட்டுகள் உள்ளன. இதைத்தான் அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 35 'பிளாக் ஸ்பாட்டுகளை' சரி செய்யும் பணிகளுக்கு ரூ.900 கோடி செலவில் டெண்டர் விடவுள்ளது. சர்வீஸ் சாலைகள் அமைத்தல், சந்திப்புகளில் விளக்குகள் பொருத்துதல் மற்றும் ராம்ப்லர் பட்டைகள் அமைத்தல், பாதுகாப்பு தண்டவாளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் 10 இறப்புகள் ஏற்பட்டால் அந்த இடம் பிளாக் ஸ்பாட் என்று கண்டறியப்படுகிறது.
இதைத்தான் அகற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
திருச்சி: அதன்படி அதன்படி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 இடங்களில் பிளாக் ஸ்பாட்கள் அகற்றப்பட்டு உள்ளன. 3 இடங்களில் இருந்த பிளாக் ஸ்பாட்கள் அகற்றப்பட்டு உள்ளன. இங்கே விபத்துகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அவை அகற்றப்பட்டு உள்ளன.
சாலை மாற்றம்: இது போக பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்க நாற்கர சாலையில் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வாகனத்தை இயக்கம் வகையில் நெடுஞ்சாலைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இ-மொபைலிட்டி மற்றும் இ-பஸ்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தங்க நாற்கர சாலை: தங்க நாற்கர சாலையானது இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை கொண்டது ஆகும், இது முக்கிய தொழில்துறை, விவசாய மற்றும் கலாச்சார மையங்களை இணைக்கிறது. இது டெல்லி (வடக்கு), கொல்கத்தா (கிழக்கு), மும்பை (மேற்கு) மற்றும் சென்னை (தெற்கே) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது ,
இந்த முன்முயற்சி விஷன் 2030: PM பொது போக்குவரத்து சேவையின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்-நெடுஞ்சாலைகளின் வளர்ச்சியானது நாட்டில் மாசுபாட்டை குறைக்கும். இதற்கு சார்ஜிங் உள்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தினசரி பயணத்திற்கு மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார மையம்: அதன்படி சாலைகளில் மின்சார சார்ஜ் மையங்கள் அமைப்பது தொடங்கி பல மாற்றங்களில் மின்சார வாகனம் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்ய உள்ளனர்.
அடுத்த 7 ஆண்டுகளில் 800,000 டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகளை களமிறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2,00,000 அரசுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் (STUs), 5,50,000 தனியார் ஆபரேட்டர்களுக்கும், 50,000 பள்ளிகள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்திற்கும் 2030ஆம் ஆண்டுக்குள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் (ஹைப்ரிட் மற்றும்) எலக்ட்ரிக் வாகனங்களின் வேகமான பயன்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications