சென்னை டூ ராணிப்பேட்டை டூ வேலூர்.. மொத்த ஸ்ட்ரெச்சும் அடையாளம் தெரியாமல் மாறும்.. செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை வேலூர், திருப்பதி உள்ளிட்ட நகரங்களுடன் இணைக்கும் பல்வேறு சாலை திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

automobile

NH-40 நெடுஞ்சாலை அமைப்பதற்கான 1,338 கோடி ரூபாய்க்கான திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வாலாஜாபேட்டை/ராணிப்பேட்டையை தமிழ்நாடு-ஆந்திர பிரதேச எல்லையில் இணைக்கும் வகையில் 28 கி.மீ. தூரத்திற்கு கட்டப்படும். 4 வழி சாலை + 2 சர்வீஸ் சாலையாகவும் இது அமைக்கப்படும்.

நெரிசலைக் குறைக்க வாலாஜாபேட்டை மற்றும் ராணிப்பேட்டையைச் சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பது இந்த திட்டத்தின் முக்கிய அங்கமாகும். இந்த திட்டத்தில் நான்கு பெரிய பாலங்கள் மற்றும் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

இது அணுகல்-கட்டுப்பாட்டு வழி சாலை ஆகும். சென்னையை பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் எளிதாக இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படும்.

சென்னை திருப்பதி:

அதேபோல் சென்னை-திருப்பதி NH716 இன் 44 கி.மீ தூரத்தை 750 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் டெண்டர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது.

சென்னையில் இருந்து மும்பை மற்றும் திருப்பதிக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கும் வகையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 144 கி.மீ. தூரத்திற்கு அகலப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.

இது சென்னை-சூரத் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாகச் செல்லும். இந்த திட்டம் மூலம் சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரம் குறைந்தது 120-130 கி.மீ அளவு குறையும் என்று கூறப்படுகிறது.

பிளான் என்ன?: சென்னை-திருப்பதி NH 205, திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு-ஆந்திர எல்லை வரை, இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கூடுதலாக, தமிழக-ஆந்திர எல்லையில் இருந்து திருப்பதி வரையிலான நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது.

இவை தயாரிக்கப்பட்ட பின் அதற்கான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பல பாலங்கள், மேம்பாலங்கள், உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஆனாலும் , NH முழுவதுமாக அல்லது பகுதியளவு எக்ஸ்பிரஸ் வே ஆக மேம்படுத்தப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னை திருப்பதி சாலையில் இதையடுத்து 44 கி.மீ தூரத்தை 750 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் டெண்டர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது.

மற்ற அறிவிப்புகள்:

சாலை மாற்றம்: அதோடு இதன் இணைப்பு சாலைகள் மூடப்படுமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை. பாடி - கொரட்டூர் சந்திப்பில் துவங்கும் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் தற்போது திருநின்றவூர் வரை 22 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலை உள்ளது. இது, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும்.

திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே 17.5 கி.மீ., தூரத்தை அகலப்படுத்தும் பணிகள், 304 கோடி ரூபாய் செலவில் நடந்து, அடுத்த செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, என்.ஹெச்.ஏ.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, பாடி - திருநின்றவூர் பிரிவில், நிலம் கையகப்படுத்த, மாநில அரசு, 152 கோடி ரூபாய் ஒதுக்கியதைத் தொடர்ந்து, நில உரிமையாளர்களுக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், காலி நோட்டீஸ் வழங்கினர்.

இவர்கள் நிலங்களை காலி செய்ததும் அங்கே கட்டுமான பணிகள் தொடங்கும். NHAI திட்டத்தின்படி, திருநின்றவூர் - திருவள்ளூர் நான்கு வழிச்சாலை NH இன் 17.5 கிமீ நீளம் கொண்டது. இங்கே கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் தேவையில்லாமல் எதிர்காலத்தில் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் அங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+