பிளாக் ஸ்பாட்.. சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில்.. ஆங்காங்கே நிலவும் ஆபத்து.. கவனம்!
சென்னை: சென்னை பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் வே பகுதியில் இன்னும் பல இடங்களில் பிளாக் ஸ்பாட் இருப்பதால் அங்கே திறக்கப்பட்ட பாதையில் பயணம் செய்வது ஆபத்தாக மாறி உள்ளது. இதனால் பிளாக் ஸ்பாட்டுகளை குறிக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அங்கே பயணிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பல இடங்களில் வேலை நடப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த சாலை அதிகாரபூர்வமாக திறக்கப்படவில்லை. தற்போது போக்குவரத்துக்கு சில பகுதிகளில் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகள் கூட கர்நாடகாவிற்கு கீழ் உள்ள பகுதிகள்தான். இங்கே அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட பின் பைக் செல்ல அனுமதி இல்லை. ஆனால் இப்போது பைக் அனுமதிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி அங்கே பலரும் வீலிங் செய்வது, சாகசம் செய்வது என்று செயல்படுகின்றனர்.

சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயில் முழுமையாக பணிகள் பல இடங்களில் முடியவில்லை. இதனால் அங்கே பயணிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே எப்போது திறக்கப்படும்:
தமிழ்நாட்டிற்கு உள்ளே திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மொத்தம் 105.7 கிமீ தூரம் செல்லும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ்வே (BCE) அமைப்பதற்கான 65% பணிகள் தமிழகத்தில் நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டு பகுதியில்.. இந்த விரைவுச் சாலை ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குடிபாலாவில் முடிவடையும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தகவல்களின்படி, தமிழ்நாடு மாநிலத்திற்குள் நடக்கும் பணிகள் ஆகஸ்ட் 2025 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரத்தையும் தூரத்தையும் கணிசமாகக் குறைக்க உதவும்.
வாலாஜாபேட்டையில் இருந்து அரக்கோணம் வரையிலான 24.50 கி.மீ சாலை பணிகள்தான் வேகமாக நடந்து வருகின்றன. இதில் 84% க்கும் அதிகமான பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த பகுதி பணிகள் முடிவடையும். இந்தப் பிரிவில் குடிமராமத்து பணிக்கு ₹662.7 கோடியும், பராமரிப்பு பணிக்கு ₹20.46 கோடியும் செலவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், குடிபாலா-வாலாஜாபேட்டை 24 கி.மீ., துாரத்தில், 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 31.07 கி.மீ தூரத்தில் 64% பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோல், அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரை உள்ள பணிகள் மட்டுமே குறைவாக முடிந்துள்ளன. இந்த பகுதியில் சுமார் 52% பணிகள் மட்டுமே முடிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் .
இந்த திட்டத்தில் 34 பெரிய பாலங்கள் மற்றும் 31 சிறிய பாலங்கள் இணைந்து 15 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படும். இந்த ரூட்டில் மிக நீளமான பாலம் 840 மீட்டர் நீளத்திற்கு இயக்கப்படும். தமிழ்நாட்டின் பகுதியில் மட்டும் ஆறு சுங்கச்சாவடிகள் கட்டப்படும்.
வேகம்: சென்னை பெங்களூர் இடையிலான தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது, பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.
BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும்.
எந்த ரூட்: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையை டிசம்பர் 2024 க்கு முன் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17,930 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்லும். ஹோஸ்கோட், மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், வெங்கடகிரிகோட்டா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள்.
இந்த நெடுஞ்சாலை 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இருக்கும், மீதமுள்ளவை 22 கிமீ உயரம் கொண்ட உயர்மட்ட 8 வழி சாலையாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 21 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை, சுமார் ₹5,850 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் தொடர்ந்து வருவதை உறுதி செய்யும்.












Click it and Unblock the Notifications