21 கிமீ.. மதுரவாயல் பாலம் பணிகள் வேகம் எடுத்தது.. களமிறக்கப்பட்ட நவீன தொழில்நுட்பம்.. அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 11 வருடங்களாக முடங்கி இருந்த சென்னை துறைமுக மதுரவாயல் பாலம் தற்போது வேகமாக கட்டப்பட்டு வருகிறது. அங்கே ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள பில்லர்களை இடிக்காமல்.. அதன் பலத்தை சோதனை செய்து.. நவீன் தொழில்நுட்பத்தில் அதை ரீமாடலிங் செய்து வருகிறார்கள்.

அதில் பலத்தை சோதனை செய்யும் பணிகள் முடிந்த நிலையில் தற்போது ரீ மாடலிங் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக இங்கே தூண்கள் அமைக்கப்படாமல் பணிகள் முடங்கி இருந்த நிலையில் தற்போது இங்கே துரிதமாக பணிகள் நடைபெற்று தூண்கள் வேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.

chennai automobile

சென்னை துறைமுக - மதுரவாயல் பாலம் - பணிகள் தீவிரம்

தற்போது 21 கி.மீ சென்னை துறைமுக - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியாக வானகரத்தில் தூண்கள் வரத் தொடங்கியுள்ளன. அதேபோல் மதுரவாயல் தாண்டி தூண்கள் இருந்த பகுதிகளில் இரண்டு அடக்கு பாலங்கள் வர தொடங்கி உள்ளன. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 19.8 கி.மீ நீள இரட்டை அடுக்கு உயர்மட்ட விரைவுச்சாலை திட்டம் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இத்திட்டம் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19.8 கி.மீ நீள இரட்டை அடுக்கு உயர்மட்ட விரைவுச்சாலை

இந்த விரைவுச்சாலையின் கீழ் அடுக்கில் மொத்தம் ஏழு ஏறுதளங்களும், ஆறு இறங்குதளங்களும் அமைக்கப்பட உள்ளன. வாகனங்கள் எளிதாகச் சென்றுவர இது உதவும். குறிப்பாக, இதன் மேல் அடுக்கு கனரக வாகனங்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேல் அடுக்கு கனரக வாகனங்கள் சென்னை துறைமுகத்தை நேரடியாக அடைவதற்கு வழிவகுக்கும். இதன் மூலம் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் நகர்ப்புற சாலைகளுக்குள் வராமல் நேரடியாக விரைவுச்சாலையை பயன்படுத்த முடியும். இது பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் கணிசமாகக் குறைக்கும்.

மதுரவாயல் சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்று கூறப்படுகிறது.

சென்னை துறைமுக - மதுரவாயல் இரட்டை அடுக்கு பழமை

இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.

இந்த பணிகளின் ஒரு பகுதியாக சமீபத்தில்தான் அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டது. 20.9 கி.மீ. துறைமுகம்-மதுரவாயல் வழித்தடத்திற்காக இந்த கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை 200 மீட்டர் நிலத்தை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+