Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் 2 பெரிய நகரங்களை இணைக்க.. புது 4 வே நெடுஞ்சாலை.. எங்கேன்னு தெரிஞ்சா.. ஆடி போயிடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 4 வழி சாலைகள் மற்றும் 6 வழி சாலைகளில் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாலைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் நிலையில்தான்.. தமிழ்நாட்டில் இரண்டு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய 4 வழி சாலை அமைக்கும் திட்டம் போடப்பட்டு உள்ளது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான டிபிஆர் தயாரிக்கும் பணிகள் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

automobile chennai

இந்த புதிய சாலையானது தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தமிழ்நாடு வந்த நிலையில்தான்.. இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது. ஆனால் இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவை மதுரை வழியாக செல்ல வேண்டிய தேவையை தவிர்த்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக செல்ல முடியும். இதனால் 2 மணி நேரம் பயண நேரம் குறையும்.

தற்போது, ​​மதுரை வழியாக செல்லும் கொச்சி - தனுஷ்கோடி சாலைதான்.. மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை. பல லட்சம் பேர் செல்லும் இந்த சாலைதான் ராமேஸ்வரம் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாக உள்ள இந்த ரோடு தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறி வருகிறது. பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரை இரண்டு வழிச்சாலையாக குறுகி உள்ளது. இதனால் அங்கே வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு வருகின்றன.

இது மட்டுமின்றி தற்போது விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொச்சி-தனுஷ்கோடி சாலையில் ராமேஸ்வரம் செல்லும் முன் மதுரைக்கு செல்ல வேண்டும். மதுரை வழியாகவே அவர்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர், பரமக்குடி வழியாக செல்வதாக இருந்தாலும் அது குறுகிய சாலை. இதை தடுக்கவே . சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 வழி சாலைகள் மற்றும் 6 வழி சாலைகளில் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாலைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் நிலையில்தான் இந்த அறிவிப்பு மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்து உள்ளது. இதனால் மதுரை செல்லாமல் ராமேஸ்வரம் செல்ல முடியும்.

இதனால் SH42 வழியை நான்கு-வழி நெடுஞ்சாலையாக விரிவுபடுத்துவதை இந்த திட்டம் முதன்மையாக கொண்டு உள்ளது. இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவையான இடங்களில் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும். அதேபோல் சில இடங்களில் சர்வீஸ் ரோடும் அமைக்கப்படும் இதனால் 2 மணி நேரம் பயண நேரம் குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+