இனி தமிழ்நாடு முழுக்க.. குடியிருப்பு, வணிக வளாகங்களில்.. இ வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி கட்டாயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, புதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. இனிமேல், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்த புதிய விதிமுறையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Automobile

இ சார்ஜிங் - கொள்கை மாற்றம்

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இ வாகனங்களுக்கு உகந்த பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களுக்கான ஹப்கள், டிஜிட்டல் சார்ஜிங் மேப் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட்

தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் (TNGECL) மற்றும் ரிலக்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் இணைந்து, மாநிலம் முழுவதும் 500 புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன. அரசுக்குச் சொந்தமான நிலங்களில் இந்த சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு முடிவடைந்த பிறகு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

1,413 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

தற்போது தமிழ்நாட்டில் 1,413 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.

இந்த முயற்சியானது, வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவைக் குறைத்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மின்சார போக்குவரத்து புரட்சியில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகனங்களுக்கான (EV) பொது சார்ஜிங் நிலையங்கள்

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான (EV) பொது சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட 316 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் மட்டுமே உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவான ஆறு முதல் 30 வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் என்ற எண்ணிக்கையை விட மிக அதிகம்.

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் (ITDP) இணைந்து தயாரித்த இந்த அறிக்கை, மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான தமிழகத்தின் ஆரம்பகட்ட முயற்சிகளுக்கு இந்த குறைபாடு தடையாக உள்ளது என எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, மாநிலத்தில் 4,47,469 மின்சார வாகனங்கள் இருந்தபோதிலும், வெறும் 1,413 பொது சார்ஜிங் நிலையங்கள் மட்டுமே உள்ளன.

தமிழ்நாட்டின் பின்னடைவை சரி செய்யும் விதமாக, தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இ வாகனங்களுக்கு உகந்த பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களுக்கான ஹப்கள், டிஜிட்டல் சார்ஜிங் மேப் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+