தமிழ்நாட்டில் இனி பயணம் செய்யும் முறையே மாறுகிறது.. வாகன ஓட்டிகளுக்கு மேஜர் அறிவிப்பு.. கவனம்
சென்னை: புதிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாதகமான பல நடவடிக்கைகள் எடுக்கப்படும், அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சவால்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு மாநிலத்திற்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவான சாலைப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் அனைத்து சார்புத்துறைகளுக்கான செயல்திட்டம் வகுப்பதற்காக, நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் கண்டறியப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது சாலையில் எப்படி பயணம் செய்ய வேண்டும், சாலை விதிகளை எப்படி அமைக்க வேண்டும், சிட்டி உள்ளே, புறவழி சாலைகளில் சாலை பயணங்கள் எப்படி இருக்கும் என்று இதில் முடிவு எடுக்கப்படும். இந்த விதிகள் வந்ததும் தமிழ்நாட்டில் சாலை விதிகள், பயன் செய்யும் முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போக தமிழ்நாட்டில் முக்கியமான 4 நகரங்களில் பைபாஸ் சாலைகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பைபாஸ் சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து பெரிய அளவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகள் வருகிறது: தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையானது, 1,055 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளது. 6 புறவழிச்சாலைகள் இதில் அமைக்கப்பட உள்ளன. உங்கள் தொகுதியில் முதல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு நெடுஞ்சாலைத் திட்டங்களில் 42,662 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், அதில் 62% நிதி அதிமுக ஆட்சியில் இருந்து நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
விளக்கம்: சாலை கிராசிங்குங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் நோக்கில், 'முதலமைச்சர் அனைத்து பருவகால தடையில்லா இணைப்புத் திட்டத்தின்' கீழ் 50 தரைப்பாலங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 1,146 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார். 'முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில்' அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை, ஈரோடு-கரூர், ராமநாதபுரம்-சிவகங்கை சாலைகள் உட்பட 200 கிமீ நீளமுள்ள இருவழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படும்.
பைபாஸ் சாலைகள்: மேலும், நடப்பு நிதியாண்டில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், 550 கிமீ நீளமுள்ள ஒற்றை வழிச் சாலைகள் இரண்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் புதிய புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.
மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் புதிய சாலை மற்றும் மதுரையில் உள்ள சித்தம்பட்டி மற்றும் தென்காசி ரோட்டில் ஆலம்பட்டியை இணைக்கும் வெளிவட்ட சாலைக்கு விரிவான திட்ட அறிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை தயாரிக்கும். தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இத்துறைகளுக்கு சரக்குகள் சீராக செல்வதை உறுதி செய்யவும், தொழில்களை இணைக்கும் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் 200 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என வேலு கூறினார். மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, 25 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications