ஒரு ஏரியா விடாமல்.. தமிழ்நாடு முழுக்க நடக்க போகும் சம்பவம்.. இவி கார் வாங்க போறீங்களா? கவனம்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இவி வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முழுக்க இதற்காக சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து மின்சார வாரியம் செயல்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாயிண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்படும்; முக்கியமாக தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.
டெல்லி 21
குஜராத் 53
ஹரியானா 2
கர்நாடகா 10
கேரளா 30
மகாராஷ்டிரா 13
மேகாலயா 1
தமிழ்நாடு 13 பாஸ்ட் சார்ஜர்கள் உள்ளன. இதை 100க்கும் அதிகமாக உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழ்நாட்டிக் பாஸ்ட் சார்ஜர்கள் அவசியம் அதிகம் ஆகி உள்ளதால், அரசு சார்பாக இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திட்டம்
இதை மனதில் வைத்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ)கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார வாகனங்களுக்கு (இ-வாகனங்கள்) மாறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. சென்னை மத்திய விநியோக வட்டம் மயிலாப்பூரில், டி. நகர், எழும்பூர், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் ஆடியோ காட்சிகள் ரோட் ஷோ நடைபெற்றது.
முறையான திட்டமிடலுடன் நடைபெற்ற 'கோ எலக்ட்ரிக் பிரசாரம்' நிறைவு விழாவில் மின்வாரிய அதிகாரிகள், இ-வாகனங்களைப் பயன்படுத்துவதால் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் வாங்கும் செலவையும் மிச்சப்படுத்துவது குறித்து விரிவாக மக்களுக்கு விளக்கினர்.
இ வாகனங்கள்
இது போக இ வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்க நாற்கர சாலையில் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வாகனத்தை இயக்கம் வகையில் நெடுஞ்சாலைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இ-மொபைலிட்டி மற்றும் இ-பஸ்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications