இவி கார் வாங்கவே கூடாது போலயே.. நாட்டையே உலுக்கிய மாபெரும் இவி கார் விபத்து.. நடந்தது என்ன?
புதுடெல்லி: உத்தரகண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் சரணாலயத்தின் சில்லா மலைத்தொடரில் சோதனை ஓட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட மின்சார வாகனம் (EV) விபத்தில் சிக்கியதில் இரண்டு வனக்காப்பாளர்கள் உட்பட நான்கு பேர் இறந்தனர் மற்றும் ஒரு பெண் வார்டன் காணாமல் போய் உள்ளார். Pravaig Dynamics என்ற பெங்களூர் நிறுவனத்தின் கார் ஆகும் இது.
மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வாகனத்தில் 10 பேர் இருந்ததாக மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) தெரிவித்துள்ளது. காயமடைந்த 5 பேர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கே இருந்த சில்லா என்ற கால்வாயில் விழுந்த பெண் வார்டனை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

விவரங்கள்: இறந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளான ஷைலேஷ் கில்தியால் மற்றும் பிரமோத் தியானி, சைஃப் அலி கான் மற்றும் குல்ராஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி அலோகியை காணவில்லை.
காயமடைந்தவர்களில் வாகனத்தில் இருந்த ஹிமான்ஷு கோசாயின் மகன் கோவிந்த் சிங், மருத்துவர் ராகேஷ் நௌதியால், அங்குஷ், அமித் செம்வால் மற்றும் அஷ்வின் பிஜு ஆகியோர் அடங்குவர். குல்ராஜ் மற்றும் அங்குஷ் ஆகியோர் வாகன தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் என கூறப்படுகிறது.
எப்படி நடந்தது ?: அதிகாரிகளின் கூற்றுப்படி, ரோந்து மற்றும் விலங்குகளை மீட்பதற்காக கொண்டு வரப்பட்ட இடைமறிப்பு இவி வாகனம்தான் இது. இது சில்லா எல்லையில் சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சில்லாவில் இருந்து ரிஷிகேஷ் நோக்கி சென்றபோது, சில்லா பவர் ஹவுஸ் முன்புறம் இருந்த மரத்தில் மோதி, கால்வாயின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில், அங்கிருந்த சிலர் பள்ளத்தில் விழுந்தனர், அலோகி என்ற பெண் கால்வாயில் விழுந்தார்.
STORY | Trial EV accident: EV company deeply saddened; driver says was forced to speed, overload
— Press Trust of India (@PTI_News) January 10, 2024
Four people, including two forest rangers, died after their trial EV met with an accident in Uttarakhand's Rajaji Tiger Reserve on Monday evening. The accident was recorded in the… pic.twitter.com/7xObtnfVFZ
அவர்களுக்குப் பின்னால் மற்றொரு வாகனத்தில் சென்றவர்கள் விபத்து குறித்து காவல் துறை மற்றும் பூங்கா நிர்வாகத்துக்கு தகவல் அளித்ததையடுத்து, மீட்பு பணி விரைவில் தொடங்கியது. போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் படுகாயமடைந்தவர்களை பள்ளத்தில் இருந்து மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு நான்கு பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அது இவி வாகனத்தை மிக வேகமாக ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அது செயல் திறனை இழந்து புரண்டு விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இவி வாகனங்கள்: இதேபோல் சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இ பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் பலியானார்கள்.
இரவில் சார்ஜ் போடும் போது பைக் பேட்டரி வெடித்து புகை ஏற்பட்டுள்ளது. இந்த புகையில் மூச்சு முட்டி இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
புனே சம்பவம்: இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென தீ பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பைக்கில் அப்போது யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென வெயிலில் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
இதற்கு ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், புனேவில் நடந்த விபத்து குறித்து நாங்கள் அறிந்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம். தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நன்றாக இருக்கிறார். பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், இதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் கார் தீ விபத்து; இந்த நிலையில்தான் சென்னையில் பிரபல இவி நிறுவன கார் ஒன்று தீ பிடித்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. MG நிறுவனத்தின் ZS EV கார் தீ பிடித்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரணமாக நிறுத்தப்பட்ட கார் தீ பிடித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications