4 மணி நேரத்தில் சென்னை - பெங்களூர் பயணம்.. வேலூரில் நடக்கும் மாஸ் மாற்றம்.. எகிறும் எக்ஸ்பிரஸ் வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூரில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) பராமரிக்கப்படும் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) நடந்து வரும் வாகன சுரங்கப்பாதையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கே பணிகள் மிக துரிதமாக நடந்து வருகிறது.

இது பற்றி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூரை, ராணிப்பேட்டை மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ள எல்லைக் கிராமமான பெருமுகையில், ₹18 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. பெருமுகை கிராமம் நெடுஞ்சாலையில் NHAI கண்டறிந்த 'கருப்பு புள்ளிகளில்' ஒன்றாகும்.

Underpass construction started in Chennai Bangalore Expressway near Vellore are in full swing

இந்த கரும்புள்ளிகள் விபத்துக்குள்ளாகும் இடங்களாகும், அவை மாவட்ட காவல்துறை கலெக்டருக்கு அவ்வப்போது அளித்த அறிக்கையின் அடிப்படையில் கண்டுபிடித்தோம். இங்கே ரோடு கிராஸிங் இருந்தால் சரியாக இருக்காது. தொப்பூர் போல விபத்து ஏற்படும். அதை தடுக்க அங்கே அண்டர் பாஸ் அமைக்கிறோம். தற்போது, ​​நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதையின் உயரமான பகுதிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்கப்பாதை தயாராகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

பணிகள் தீவிரம்: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை எந்த இடத்திலும் எந்த ஊருக்குள் செல்லாது. இந்த நிலையில் சாலையில் இருந்து ஆங்காங்கே வெளியேறுவதற்கான இன்டர்பாஸ், இன்டர்சேஞ்ச் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.

அதாவது ஊருக்குள் செல்ல விரும்பும் நபர்கள்.. எக்ஸ்பிரஸ் வேயில் இருந்து வெளியேற வசதியாக. அதே சமயம் எக்ஸ்பிரஸ் வே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வெளியேற வசதியாக இன்டர்சேஞ்ச் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.

இதற்கான கட்டுமானம் விரைவாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருட இறுதியில் இந்த சாலைகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளன. அதேபோல் சாலையில் உள்ள 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம்: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.

பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.

இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+