தென் மாவட்டங்களுக்கு விடிவுகாலம்.. வருது பெரிய பைபாஸ்.. பல லட்சம் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி
விருதுநகர்: விருதுநகர் பைபாஸ் சாலை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. தென் மாவட்டங்களில் முக்கியமான பைபாஸ் பணிகளாக இது மாற உள்ளது. 2025 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ள அருப்புக்கோட்டை புதிய பை-பாஸ் சாலைப் பணியை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை நகருக்குள் வாகனங்கள் செல்லாமல் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையுடன் விருதுநகரை இணைக்கும் புதிய பை-பாஸ் சாலை அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

9.9 கிமீ நீள புதிய சாலைப் பணி நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வி.பி. ஜெயசீலன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் 7.5 கி.மீ. பணிகள் முடிவு அடைந்து உள்ளனர் என்று அறிவித்து உள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக 22 பெட்டி கல்வெர்ட் பணிகள் முடிவடைந்த நிலையில், ஒன்பது சிறு பாலங்களில் ஒன்று மட்டுமே கட்டாமல் நிலுவையில் உள்ளது. இதேபோல், விருதுநகர்-மானாமதுரை ரயில் பாதையின் மேல் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 936 மீட்டர் நீளத்திற்கு தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லாமல் மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையை நோக்கி பிரிந்து செல்லும் வகையில் அருப்புக்கோட்டை நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் நகரில் வாகன நெரிசலைக் குறைப்பதுடன், விருதுநகரில் இருந்து தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் மதுரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்க இந்த புதிய சாலை உதவும்.
119.58 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் மாநில நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) மூன்று இடங்களில் ஜங்சன் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ₹35.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணியை மார்ச் 2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களை இணைக்கும் இன்னொரு சாலை; இது போக தமிழ்நாட்டில் அமைய உள்ள மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வேக்களில் ஒன்றான மதுரை - திருச்சி - சென்னை இடையே அமைய உள்ள புதிய எக்ஸ்பிரஸ்வேவின் 8 சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த சாலையை உடனே அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக நேற்று நடந்த ஒரு சம்பவம் காரணமாக இந்த சாலைக்கான தேவை அதிகரித்து வருகிறது.
நேற்று மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பத்தின் மீது இடி தாக்கி ஒயர்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. இந்த சாலையில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் இன்னும் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம் தொடங்கவில்லை. ஜூலை 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், சென்னை, திருச்சி மற்றும் மதுரை இடையே கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையை ₹26,500 கோடி மதிப்பீட்டில் NHAI அமைக்க உள்ளது. சென்னை டூ திருச்சி இடையிலான 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கான டிபிஆர தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாம். அதோடு சேர்த்து இந்த பணிகள் மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளன.
சென்னை திருச்சி இடையிலான பயணத்தை 5-6 மணி நேரத்தில் இருந்து 2.30-3 மணி நேரமாக குறைக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். இதில்தான் மதுரை கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications