டோல் கட்டணம் கிடையாது.. திறக்கப்பட்ட பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ் வேயில்.. புது வசதி.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தற்காலிகமாக டோல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது தற்காலிக நடவடிக்கைதான்.. ஏனென்றால் பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வேயின் மற்ற 2 பகுதிகளின் கட்டுமானம் இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சாலையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மாறாக டோல் அமைக்கப்பட்டு உள்ளது.

automobile chennai bangalore

அதன் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மற்ற நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே எத்தனை செல்கின்றன.. என்பவை மட்டும் தற்காலிகமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் பெரும்பாலும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது .

விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையே இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.

தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ

தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ

பெங்களூர் சென்னை விரைவுச்சாலையில் அவசரத்திற்கு யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவசர கால தேவைகள், போக்குவரத்து மாற்றங்களை சமாளிப்பதற்காக யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக எக்ஸ்பிரஸ் வே சாலைகளில்.. இப்படி யூ டர்ன் எடுக்கும் வசதிகள் இருக்காது. ஆனால் சென்னை பெங்களூர் சாலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலையில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+