ஐயோ மீண்டும் மீண்டுமா.! அதிர்ச்சி கொடுத்த மாருதி நிறுவனம்.. கதறும் கார் பிரியர்கள்! என்ன மேட்டர்?
சென்னை: இந்தியாவின் டாப் கார் நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கிறது. முதல்முறை கார் வாங்கும் பலரும் மாருதி கார்களையே வழங்குவார்கள். மாருதி கார்கள் தரும் மைலேஜும், அந்நிறுவனம் வழங்கும் சர்வீஸும் தான் பிரதான காரணமாகும். இதற்கிடையே மாருதி நிறுவனம் இப்போது அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இப்போதும் பெரும்பாலான மக்கள் டூவீலர்களையே வைத்துள்ளனர். நமது நாடு இன்னும் டூவீலர் அடிப்படையாகக் கொண்ட நாடாகவே இருக்கிறது. அதேநேரம் இப்போது மிடில் கிளாஸ் மக்களில் கணிசமானோர் கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் கார் மார்கெட் சந்தையும் கூட கணிசமாக வளர்ந்தே வருகிறது.

மாருதி கார்கள்
நமது நாட்டில் கார் மார்கெட்டில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் என்னவோ மாருதி சுசுகி தான். பல ஆண்டுகளாகவே நாட்டில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கிறது. அதிலும் ரூ.10 லட்சத்திற்குக் குறைவான சிறிய ரக கார்களில் மாருதி தான் கிங். மாருதி தரும் மைலேஜ் வேறு எதிலும் கிடைக்காது. இதற்காகவே பலரும் மாருதி கார்களை வாங்குவார்கள்.
இதற்கிடையே மாருதி சுசுகி நிறுவனம், அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் ஆப்ரேஷனல் செலவுகள் காரணமாக கார் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த கார் விலை உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் மாடல்களை பொறுத்து மாருதி கார்களின் விலை 4% வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு
தற்போது பொதுவாக கார்கள் விலை 4% வரை உயரும் என மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாடல் விலை எந்தளவுக்கு உயரும் என்பது குறித்த அறிவிப்பை மாருதி இன்னும் வெளியிடவில்லை. வரும் காலங்களில் அது குறித்த அறிவிப்பையும் மாருதி நிறுவனம் வெளியிடும் எனத் தெரிகிறது. செலவுகளைக் குறைக்கவும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் மாருதி கூறியுள்ளது. இருப்பினும், செலவு தொடர்ந்து அதிகரிப்பதால் குறிப்பிட்ட செலவில் ஒரு பகுதியைச் சந்தைக்கு மாற்ற வேண்டி இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.
மூன்றாவது முறை
இந்தாண்டு மாருதி சுஸுகி நிறுவனம் மூன்றாவது முறையாகத் தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலில் தனது மாடல்களின் ரேட்டை உயர்த்தியது. தொடர்ந்து பிப்ரவரி மாதமும் மீண்டும் ஒரு முறை மாடல்களின் ரேட்டை உயர்த்துவதாக அறிவித்தது. அப்போது மாருதி கார்களின் விலை ரூ.32,500 வரை உயர்த்தப்பட்டது. இதற்கிடையே இப்போது மூன்றாவது முறையாக மீண்டும் விலை உயர்வை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
நமது நாட்டில் மிடில் கிளாஸ் மக்களும் முதல்முறையாக கார்களை வாங்குவோரும் பெரும்பாலும் மாருதி கார்களையே வாங்குவார்கள். அப்படியிருக்கும் போது மாருதி நிறுவனம் இப்படித் தொடர்ந்து ரேட்டை ஏற்றி வருவது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.
மாருதி கார்கள்
மாருதி தனது நெக்ஸா மற்றும் அரினா என இரண்டு ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. குறைந்த ரேட் கார்கள் அரினா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதில் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலியோ, ஈகோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா கார்கள் விற்கப்படுகிறது. ப்ரீமியம் கார்களான இக்னிஸ், பலேனோ, சியாஸ், ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி, எக்ஸ்எல்6 மற்றும் இன்விக்டோ போன்ற மாடல்கள் நெக்ஸா ஷோரூமில் விற்கப்படுகிறது.
விலையை ஏற்றிய டாடா
மாருதி நிறுவனத்தைத் தொடர்ந்து டாடா நிறுவனமும் தனது கமர்ஷியல் வாகனங்களின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 2% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications