அடுத்த 3 வருடத்தில்.. கோடிகளில் புரளலாம்.. சென்னையில் இந்த 3 இடத்தை விடாதீங்க.. ராஜ யோகம்!
சென்னை: சென்னையில் முக்கியமான சில இடங்களில் முதலீடு செய்தால் அடுத்த 3-5 வருடங்களில் மிகப்பெரிய அளவில் ரிட்டன் கிடைக்கும். இந்த பகுதிகளில் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது மிகப்பெரிய அளவில் ரிட்டன் கிடைக்க வழி வைக்கும். லட்சங்களில் முதலீடு செய்தால் கோடிகளில் லாபம் கிடைக்கும். அந்த இடங்கள் குறித்து பார்க்கலாம்.
சென்னையில் ஸ்ரீபெரும்புதூர், காட்டுப்பள்ளி டூ மாமல்லபுரம் செல்லும் ஈசிஆர் சாலை, பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை உள்ள சாலை, இந்த 3 இடங்களில் முதலீடு செய்தால் மிகப்பெரிய அளவில் ரிட்டர்ன் கிடைக்கும். குறைவான முதலீடு கூட இங்கே ராஜயோகமாக மாற வாய்ப்புகள் உள்ளன. 5 வருடங்களுக்கு முன் இங்கே சதுர அடிக்கும் 1500- 2500 ரூபாய் வரை சராசரியாக இருந்தது. தற்போது இதே பகுதிகளில் சதுர அடி 5500- 6000 ரூபாய் வரை செல்கிறது.

சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே, காட்டுப்பள்ளி டூ மாமல்லபுரம் ரிங் ரோடு, பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ, பரந்தூர் விமான நிலையம், ராணிப்பேட்டை தொழிற்சாலைகள், ராணிப்பேட்டை டாடா முதலீடுகள் ஆகியவை காரணமாக இந்த பகுதிகளில் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர போகிறது.
இங்கே வரப்போகும் பல்வேறு திட்டங்கள் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
ரிங் ரோடு: தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.
5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவாயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இந்த விரைவுச்சாலை கட்டுமானத்திற்கு 2025 ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. NHAI இன் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு சென்னை விரைவுச்சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இது இணைக்கப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.
பெங்களூரு சென்னை விரைவுச்சாலை: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையை டிசம்பர் 2024 க்கு முன் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17,930 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்லும். ஹோஸ்கோட், மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், வெங்கடகிரிகோட்டா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள்.
இந்த நெடுஞ்சாலை 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இருக்கும், மீதமுள்ளவை 22 கிமீ உயரம் கொண்ட உயர்மட்ட 8 வழி சாலையாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 21 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை, சுமார் ₹5,850 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் தொடர்ந்து வருவதை உறுதி செய்யும்.
நெரலூர் முதல் தருமபுரி வரையிலான 94 கிமீ நீள நெடுஞ்சாலை (NH-844) சுமார் ₹3,870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மீன்சுருட்டியிலிருந்து சிதம்பரம் வரை (NH-277) இணைக்கும் 31 கிமீ 2-வழி நெடுஞ்சாலை சுமார் ₹720 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு நெடுஞ்சாலைகளும் பிராந்தியத்தில் தொடர்ச்சியான இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பரந்தூர்: பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த திட்டம் தீவிரமாக முன்னேறி வருகிறது. இதற்கான தொழில்நுட்ப ரீதியாக டிபிஆர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முதல் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு விட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் தோற்றம் சாட்டிலைட் புகைப்படங்களில் தெளிவாக உள்ளது. சமன்படுத்தப்பட்ட நிலங்களின் தோற்றம் இதில் காணப்பட்டு உள்ளது. இதிலேயே அருகிலேயே ஒரு கோடு போன்ற அமைப்பு உள்ளது. அதுதான் பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வே ஆகும். பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் அடுத்த வருடம் திறக்கப்படும் சாலை இதன் வழியேதான் வர உள்ளது.
சமீபத்தில் வெளியான டிபிஆர் அறிக்கையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையம் 2029 இல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையின்படி, விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2026 இல் தொடங்கப்பட்டு நான்கு கட்டங்களாக உருவாக்கப்படும்.
20 மில்லியன் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்ட முதல் கட்டம் 36 மாதங்களில் முடிக்கப்பட்டு 2029ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். விமான நிலையத்தில் இரட்டை ஓடுபாதைகள், இருபுறமும் டாக்ஸிவே, மூன்று பயணிகள் முனையங்கள் மற்றும் பிரத்யேக சரக்கு முனையம் ஆகியவை இருக்கும். பெரிய விமானங்களை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ: பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சென்னை மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்து உள்ளது.
இதன் ஒரு கட்டமாக பரந்தூரில் மொத்தம் 2 மெட்ரோ நிலையங்கள் வர உள்ளன. உள்ளூர் விமான நிலைய பகுதிக்கு அருகே ஒரு ஸ்டேஷன், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஸ்டேஷன் என்று இரண்டு ஸ்டேஷன்கள் வர உள்ளன.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் (DFR) முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
1. வழித்தடத்தின் மொத்த நீளம்: 43.63 கி.மீ
2. பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள்: 19 (தோராயமாக)
3. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ 10,712 கோடி (தோராயமாக)
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications