Madras Day: லெப்ட்ல டைடல் பார்க்.. ரைட்ல மெட்ரோ ரயில்.. 382 வயதிலும் அசராமல் பீடு நடை போடும் சென்னை
சென்னை: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உருவான சென்னையில் பல்வேறு புதிய கட்டடங்கள் வேகமாக வளர்ந்து தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பெருமையை பறைசாற்றி வருகிறது.
Recommended Video
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியால் சென்னை உருவாக்கப்பட்டு 382 ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் சென்னை மேலும் மேலும் உயர்ந்து இன்று உலகமே திரும்பி பார்க்கும் வகையில் வேகமாக முன்னேறி வருகிறது.
அந்த சென்னையில் மக்கள் பயன்பாட்டுக்காகவும் வேலைவாய்ப்பை பெருக்கவும் கொண்டு வந்த திட்டங்கள் சில குறித்து இந்த சென்னை டே சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.

2000 ஆம் ஆண்டு டைடல் பார்க்
டைடல் பார்க்: தமிழகத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு தொழில் துறையில் புதிய சாதனை என்றால் அது டைடல் பார்க் உருவாக்கப்பட்டது. இது தரமணியில் 338 கோடி ரூபாய் செலவில் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தம் 13 தளங்களையும் 19 லிப்ட்டுகளையும் கொண்டது. இதை கட்டி முடித்தவர் சி.எென். ராகவேந்திரன், இவர்தான் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் கட்டி முடித்தார். ஆசியாவில் உள்ள மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் பல லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை பெற்றனர்.

சென்னை மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்: சென்னையில் உள்ள இந்த மெட்ரோ ரயில் சேவை விரைவு போக்குவரத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவின் டெல்லி, ஹைதராபாத் ஆகிய மெட்ரோக்களுக்கு அடுத்து மூன்றாவது மிக நீளமான மெட்ரோ ரயில் சேவை என்றால் அது சென்னைதான். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. சென்னையில் 52 மெட்ரோ ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 5 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் சேவை கிடைக்கும். முதலில் கட்டப்பட்ட மெட்ரோ சேவை கோயம்பேடு டூ ஆலந்தூர் வரையிலான 10 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்த ரயில்களின் வேகம் மணிக்கு 80 கி.மீ. ஆகும்.

முதல்வர்கள் கொண்டு வந்த திட்டம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடங்கி வைத்தவர் ஜெயலலிதா என்றாலும் இந்த திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆசியாவில் மிகப் பெரிய பேருந்து முனையம் இதுதான். முன்னர் பாரிமுனையில்தான் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மிக பிரம்மாண்டமான பேருந்து நிலையத்தை கோயம்பேடு பகுதியில் ஜெயலலிதா உருவாக்கினார். இந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் கோயம்பேடு காய், கனி, பூ மார்க்கெட் உள்ளது. இதன் பரப்பளவு 37 ஏக்கர் ஆகும். இங்கு ஒரே நேரத்தில் 270 பேருந்துகளையும் நிறுத்தலாம். தினமும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. சென்னை நகரத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்பட்ட இது போன்றதொரு நிறுத்தற் வசதி இதுவே முதலாவதாகும்.

அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம்
அண்ணா பல்கலைக்கழகம்: இது இந்தியாவின் தலைச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. பொறியியல், தொழில்நுட்பம் தொடர்புடைய படிப்புகள் உள்ளனர். உயர் கல்வி, ஆராய்ச்சி கல்வியையும் சிறப்பாக வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயரிட்டப்பட்ட நிலையில் 1982 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. உலக பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 651- 700 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாசியாவில் பெரியது
கத்திப்பாரா மேம்பாலம்: தென்னாசியாவில் மிக பெரிய ஃபிளைஓவர் என்றால் இதுதான். கிண்டி- கத்திப்பாரா சந்திப்பு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2008ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. அந்த ஆண்டு தீபாவளியையொட்டி திறக்கப்பட்டதால் இது மக்களுக்கு தீபாவளி பரிசாக ஆனது. இது போன்ற மேம்பாலங்கள்தான் சென்னையில் வாகன பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது. இது போல் சென்னை துறைமுகம்- மதுரவாயல் விரைவுச் சாலை சென்னையில் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இதன் மதிப்பு 1815 கோடி ரூபாய் ஆகும். துறைமுகத்திலிருந்து மதுரவாயல் செல்ல அப்போதெல்லாம் போக்குவரத்தை பொருத்து 1 முதல் 2 மணி நேரங்களாகும். ஆனால் தற்போது வெறும் 15 முதல் 20 நிமிடங்களில் கடந்து விடும் நிலை உள்ளது.

சென்னை மால்கள்
மால்கள்: சென்னை அமைந்தகரையில் அம்பா ஸ்கைவாக், வடபழனியில் விஜய் போரம் மால், வேளச்சேரியில் ஃபீனீக்ஸ் மால், கோயம்பேட்டில் விஆர் மால் ஆகிய வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் தியேட்டர்கள், உணவு கடைகள், துணி கடைகள், ஸ்பா உள்ளிட்டவை காணப்படுகின்றன. இது போன்ற மால்கள் மூலம் பலர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இவை மக்களின் பொழுதுப்போக்கு அம்சங்களாகவும் உள்ளது. வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் இருந்து வந்த மால்கள் கலாச்சாரம் சென்னையிலும் வந்துவிட்டது.

டெட்ராய்டு ஆப் இந்தியா
டெட்ராய்டு ஆப் இந்தியா: இது போதாதற்கு உலக புகழ் பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராய்டு என்ற இடத்தில் உள்ளது. அது போல் சென்னையிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல நிறுவப்பட்டுள்ளன. இதனால் தலைநகர் சென்னை டெட்ராய்டு ஆப் சென்னை என அழைக்கப்படுகிறது. இங்கு போர்டு, ஹூண்டாய், ரினால்ட் நிசான், ராயல் என்பீல்டு, ஜாவா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications