வில்லங்கத்தில் நடிகரின் மனைவி உபாசனா! முற்போக்கில் பிற்போக்கு! மகப்பேறு இயற்கையாக நடக்கணும்: பிரபலம்
சென்னை: மகப்பேறு எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் இயற்கையாக நடக்க வேண்டும்.. டெக்னாலஜி, சயின்ஸ் என்று இயற்கைக்கு மாறான கருத்தை எல்லாம் சொல்லக்கூடாது" என்று பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபல நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா சொன்ன கருத்து குறித்தும் பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே தெலுங்கு நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளார்..

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்
சமீபத்தில் ஹைதராபாத் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உபாசனா மாணவர்களிடம் உரையாடியபோது, ‛‛பெண்களுக்கான இன்ஸூரன்ஸ் என்பது தங்கள் கருமுட்டையை உறைய வைப்பது. எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்பதெல்லாம் உங்களின் விருப்பமாக தான் இருக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது குழந்தையை பெற்றெடுக்கலாம். நான் இன்று என்னுடைய சொந்த காலில் சுதந்திரமாக நிற்கிறேன். என்னுடைய பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளேன். இது என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதுபோன்ற தைரியம் உங்களுக்கும் வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் 30 வயதிற்குள் உங்கள் குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு உங்களைத் தடுக்க யாராலும் முடியாது'' என்றார்..
விமர்சனங்கள் - கருத்தரிப்பு
பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்ற பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று உபாசனா பேசியிருந்தது பலரது கவனத்தையும் பெற்றது.. குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட சொல்கிறார் உபாசனா என்ற விவாதமும் சோஷியல்மீடியாவில் வெடித்தது.
இதையடுத்து, உபாசனா எக்ஸ் வலைத்தளத்தில், சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிவிட்டு விளக்கம் தந்திருந்தார். மேலும் தன்னுடைய திருமணம், கருத்தரிப்பு மற்றும் நேரம் பற்றிய தனிப்பட்ட பதிவையும் ஷேர் செய்திருந்தார்..
இரட்டை குழந்தைகள்
அதில், 27 வயதில் நான் விரும்பியவன் மீது திருமணம் செய்தேன். 29-ல் என் முட்டைகளை உறைவு செய்ய முடிவு செய்தேன். 36-ல் என் முதல் குழந்தையை பெற்றேன். தற்போது 39-ல் இரட்டைக் குழந்தைகளை எதிர்நோக்கி இருக்கிறேன். திருமணமும், தொழிலும் எனக்கு இரண்டும் முக்கியமானவை. ஆனால் நேரத்தை நான் தான் நிர்ணயிக்கிறேன். இது சலுகை இல்லை, என் உரிமை" என்று பதிவிட்டிருந்தார்.
உபாசனாவின் இந்த கருத்துக்கு மிகப்பெரிய விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது.. நம்முடைய நாட்டை பொறுத்தவரை, பெரும்பாலான பெண்களுக்கு முட்டை உறைவு செய்வது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாத ஒன்று.. சமூகம், குடும்ப சூழல் போன்ற உண்மைகள் எளிதில் பொருந்தாது என்று எதிர் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மற்றொருபுறம் டாக்டர்கள், பணிபுரியும் பெண்களில் ஒரு தரப்பினர், உபாஸனாவின் கருத்துக்களை ஆதரித்து வருகிறார்கள்..
இயற்கையான முறையில் மகப்பேறு
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "36 வயதில் முதல் குழந்தையையும், 39-ல் இரட்டைக் குழந்தைகளை எதிர்நோக்கியும் இருப்பதாக உபாசனா சொல்கிறார்.
ஆனால், மற்றவர்களுக்கு அட்வைஸ் தருவதுபோல, கருமுட்டையை பாதுகாத்து வைத்து இரண்டாவது முறை கர்ப்பத்தை அவர் தரிக்கவில்லை. அந்த முறையில் மகப்பேறு அடையாமல், இயற்கையான முறையிலேயே மகப்பேறு அடைந்துள்ளார்.
கருமுட்டையை சேகரித்து வைத்து கொண்டு, பிற்காலத்தில் அதனால் தோல்வி அடைந்தால் என்னாவது? உபாஸனா பேசுவது முற்போக்காக தெரிந்தாலும், அது பிற்போக்குதான்.. பெண்களின் வளர்ச்சிக்கு மகப்பேறு தடையாக உள்ளதாக உபாசனா சொல்ல வருகிறாரா? ஒருவேளை மகப்பேறு தடை என்றால், திருமணமும் பெண்கள் முன்னேற்றத்துக்கு தடை என்பாரா?
மகப்பேறு போன்ற விஷயங்களை 'ஸ்கேல்' போட்டு திட்டமிட முடியாது, 10 வருடங்களாக பெண் கிடைக்காமல் சுற்றும் ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள்..
பெண் கிடைக்காத 90K, 2K கிட்ஸ்கள்
2K கிட்ஸ்கள் மட்டுமல்ல, 90's கிட்ஸ்களுக்கு பெண் கிடைக்காததற்கு காரணம், பிறப்பு எண்ணிக்கை அன்று குறைந்ததுதான்.. ஏனென்றால், 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசுக்கொலை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களால் பெண் பிறப்பு விகிதம் குறைந்தன.. கள்ளிப்பால் ஊற்றி பெண்களை கொன்றார்கள்.. இதற்கு பிறகுதான், ஆணா, பெண்ணா என்பதை தெரிவிக்கக்கூடாது என்று கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஒரு ஆண் உள்ள இடத்தில் 3 பெண்கள் இருந்தனர்.. பிறகு 2 பெண்கள் இருந்தனர்.. இன்று 1 பெண் மட்டுமே உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், 'இவனா அவனா' என்று தேர்வு செய்யும் இடத்திற்கு பெண்கள் வந்துவிட்டார்கள்.. மேலும் நிறைய பெண்கள் படித்து டிகிரி வாங்கிவிட்டார்கள்..
எனவே பெண்களின் முன்னேற்றத்திற்கு மகப்பேறு என்பது தடை என்று சொல்லவே முடியாது. மகப்பேறு தள்ளிப்போட்டால், முதியோர்களைப் பராமரிக்க ஆள் இல்லாமல் போய்விடும் என்பது போன்ற விளைவுகளும் ஏற்படும்..
இயற்கைக்கு மாறான விஷயங்கள்
மகப்பேறு தள்ளிப்போட வேண்டிய நிர்ப்பந்த சூழல் அதாவது உடல்நலம், பொருளாதாரம் போன்று ஒரு சிலருக்கு மட்டுமே உபாஸனா சொல்லும் கருத்துக்கள் பயன்படும்.. உடல் நலம் காரணமாக கருத்தரிக்க முடியாத பெண்களும் இங்கு உண்டு, விபத்தில் இறந்த மகனின் விந்தணுவை எடுத்து, தாய் கருவை சுமந்த சம்பவமும் இங்கு உண்டு. எனவே இது தேவையை பொறுத்தது.
மகப்பேறு எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் இயற்கையாக நடக்க வேண்டும்.. டெக்னாலஜி, சயின்ஸ் என்று இயற்கைக்கு மாறான கருத்தை எல்லாம் சொல்லக்கூடாது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications