Actress Seetha: நைட்டியுடன் மாடு மேய்த்த நடிகை சீதா.. கடைசியில் நடந்த சம்பவம்! இப்படி மாறிட்டாரே!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கதாநாயகியாகவும், பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடிகை சீதா நடித்து வருகிறார். திரை உலகின் வெளிச்சம் புகழ் எல்லாம் இருந்தாலும் வாழ்க்கையின் இயல்பான அமைதியை அதிகம் விரும்பும் சீதா இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்
நடிகை சீதா, நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் சில வருடங்களிலே விவாகரத்தில் முடிந்து விட்டது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்திய சீதா சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அந்த நேரத்தில் தன்னுடைய வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருந்தார்.
அதற்குப் பிறகு சீரியல் மூலமாக அதனுடைய கம்பேக் கொடுத்தார். இப்போது சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த சில வருடங்களாக நடிப்பதை குறைத்துக் கொண்டார் தனது விவசாய நிலத்தில் நேரம் செலவிடுவதே மன நிறைவாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அதிலும் தன்னுடைய தோட்டத்தில் மட்டுமில்லாமல் வீட்டு மொட்டை மாடியிலும் கூட இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
அம்மாவின் இழப்பு
தானே இயற்கையாக விளைவித்த பொருள்களை தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதுதான் தனக்கு உண்மையான சந்தோஷத்தை தருகிறது என்று பல பேட்டிகளிலும் பேசி இருக்கிறார். சமீபத்தில் தான் சீதாவின் அம்மா காலமானார். சினிமாவில் அறிமுகமான முதல் நாளிலிருந்து கடைசி வரைக்கும் தன்னுடைய அம்மா தனக்கு சூட்டிங்கில் துணையாக வந்தார். ஆனால் இனி அவர் இல்லாமல் என்னுடைய வாழ்க்கையில் நான் தனியாக பயணிக்க போகிறேன் அதை நினைக்கும் போது வருத்தமாகவும், பயமாகவும் இருக்கிறது என்று சீதா உருக்கமாக பதிவு வெளியிட்டிருந்தார்.
அப்போது அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி வந்தனர். அதற்குப் பிறகும் சில நாட்களாகவே அம்மா பற்றிய உருக்கமான வருத்தத்தை சீதா பகிர்ந்து வருகிறார். இதற்கிடையே அம்மா இறப்பிற்கு பிறகு தலைமுடியை மொட்டை அடித்து அவர் வெளியிட்ட போட்டோஸ்கள் கூட பெரிதாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மார்டன் உடையில் போட்டோ சூட் நடத்தி இருந்தார். அதை பார்த்ததும் சீதா இது கூட அழகா இருக்கிறது என்று பலர் கமெண்ட் கொடுத்து இருந்தனர்.
நடிகை சீதாவின் வீடியோ
இந்த நிலையில் சீதா இன்று வெளியிட்ட வீடியோவில், ஒரு கன்று குட்டியுடன் குழந்தை போல விளையாடி இருக்கிறார். நைட்டி அணிந்து கன்று குட்டியை மேச்சலுக்காக அழைத்துச் செல்லும்போது அந்த கன்றுக்குட்டி திடீரென சீதாவை இழுத்துக்கொண்டு ஓட, அதைத் தொடர்ந்து சீராகவும் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்.
ரசிகர்கள் கமெண்ட்ஸ்
ஒரு பக்கம் அம்மா இழப்பால் மனவேதனையில் இருந்த சீதா இப்போது இயற்கையோடு இணைந்து விலங்குகளுடன் விளையாடி சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷம் தேடு மனிதராக மாறி இருப்பதை பார்த்து, பலரும் இப்படியே இருங்க உங்க முகத்தில் இந்த சிரிப்பு எப்போதும் இருக்கட்டும் என்று ஆறுதல் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். வாழ்க்கையில் பெரிய இழப்புகளுக்கு பிறகு மனிதன் மீண்டும் சந்தோஷத்தை தேடி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு உதாரணமாக சீதாவின் தற்போதைய வீடியோ பலருக்கும் தோன்றுகிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications