திரிஷாவை கூட்டிட்டு வந்தா தான் விருது.. போனில் நடந்த டீல்.. ஓபனா போட்டு உடைத்த அமீர்
சென்னை: இயக்குநர் அமீர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் உணர்ச்சிப் பின்னணியையும் கொண்ட படங்களை உருவாக்கிய இயக்குநர்களில் முக்கியமானவர். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்தவர். தற்போது அவர் அளித்த ஒரு பழைய நினைவுகளை பகிர்ந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமீரின் ஆசை
அந்த பேட்டியில் அமீர் தனது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துள்ளார். "எனக்கு பொதுவாக விருதுகள் மீது பெரிதாக ஆசை கிடையாது. ஆனால் என் சொந்த ஊரான மதுரையில் ஒருநாள் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது" என்று அவர் கூறியுள்ளார். அவர் கல்லூரியில் படித்த காலத்தில் ஹாஸ்டலில் தங்கி இருந்ததாகவும், அந்த ஹாஸ்டலுக்கு எதிரில் ஒரு பெரிய மண்டபம் இருந்ததாகவும் கூறுகிறார். அந்த மண்டபத்தில் அடிக்கடி விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
அதை பார்த்துக் கொண்டே இருப்பேன். "ஒருநாள் நாம இங்கே வந்து விருது வாங்கணும்" என்று அந்த காலத்திலேயே மனதில் நினைத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
முதல் படம்
அதன் பிறகு அவர் இயக்கிய முதல் திரைப்படமான மௌனம் பேசியதே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படம் வெளியான பிறகு பல இடங்களில் அவருக்கு விருதுகள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த வெற்றிகளுக்குப் பிறகும் "என் சொந்த ஊரில் இன்னும் விருது வாங்கலையே" என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்ததாக அமீர் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பையும் மறுத்த அமீர்
அந்த நேரத்தில் ஒருநாள் மதுரையில் அவர் ஆசைப்பட்ட அதே மண்டபத்தில் நடைபெறும் விருது விழா குழுவிலிருந்து அவருக்கு போன் வந்ததாம். அப்போது "மௌனம் பேசியதே படத்திற்காக உங்களுக்குஸசிறந்த இயக்குநர் விருது கொடுக்க இருக்கிறோம். நீங்கள் வந்து விருது வாங்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள்.
அதை கேட்ட அமீர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், எப்போது வர வேண்டும், எந்த தேதி நிகழ்ச்சி நடக்கிறது என்று எல்லா விவரங்களையும் கேட்டதாகவும் கூறினார்.
ஆனால் கடைசியில் அந்த குழுவினர், "நீங்கள் வரும்போது நடிகை திரிஷாவையும் கூட்டி கொண்டு வாருங்கள்" என்று அவர்கள் கூறியதாக அமீர் தெரிவித்தார். அதை கேட்ட அமீர் "அவங்க எதற்கு வரணும்? எனக்கு இயக்குநர் விருது கொடுக்கிறீங்க. அதற்காக ஏன் அவரை கூட்டிட்டு வரணும்? அவருக்கும் விருது கொடுக்கிறீங்களா?" என்று கேட்டதாக அவர் கூறினார்.
அதற்கு அவர்கள், "இல்லை... அவருக்கு விருது கிடையாது. ஆனால் உங்கள் படத்தில் அவரை அறிமுகப்படுத்தியதால் அவரையும் கூட்டி கொண்டு வாருங்கள்" என்று கூறியதாக அமீர் தெரிவித்துள்ளார். அதை கேட்ட அமீர், "இப்படி ஒரு நிபந்தனை இருந்தால் எனக்கு அந்த விருது தேவையில்லை" என்று சொல்லி அந்த வாய்ப்பையே மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
எளிமையான பழக்கவழக்கம்
அமீர் மேலும் கூறும்போது, தன்னுடைய வாழ்க்கை முறை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். "பொதுவாக நான் ஒரு படம் முடிந்த பிறகு அந்த படத்தில் நடித்த அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்க மாட்டேன். சில முக்கியமானவர்களுடன் மட்டும் தான் தொடர்பில் இருப்பேன். என் வீட்டில் அல்லது என்னுடைய நிகழ்ச்சிகளில் கூட எல்லாரையும் அழைப்பது கிடையாது. மிகவும் நெருக்கமான சிலருடன் மட்டும் தான் தொடர்பு வைத்திருப்பேன்" என்று அவர் கூறியுள்ளார்.
யார் இந்த அமீர்?
அமீர் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான அவர் பின்னர் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் பாலா உடன் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு தான் அவர் தனியாக இயக்குநராக களம் இறங்கினார்.
அவர் இயக்கிய முதல் படம் மௌனம் பேசியதே. அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு அவர் இயக்கிய பருத்திவீரன் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம்.
விருதுகளும் பாராட்டுகளும்
பருத்திவீரன் படம் வெளியானபோது விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. அந்த படம் பல விருதுகளையும் வென்றது. அதன் பிறகு அமீர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பல முயற்சிகளை மேற்கொண்டார். சினிமாவில் வித்தியாசமான கதைகளை சொல்ல முயற்சி செய்யும் இயக்குநராக அவருக்கு தனி இடம் உருவானது.
வைரலாகும் பேட்டி
தற்போது அவர் பகிர்ந்த இந்த அனுபவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக விருது வாங்கும் வாய்ப்பையே அவர் மறுத்த சம்பவம் குறித்து பலரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் பலர் விருதுகளை பெரிதாக எதிர்பார்க்கும் காலத்தில், ஒரு நிபந்தனை காரணமாக அதையே மறுத்துவிட்டார் என்ற அமீரின் இந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications