மௌன விரத மாஸ்டர் விஜய்! பெண்களுக்காக பேசுவாரு, திரிஷா பற்றி வாய் திறக்க மாட்டாரு! ப்ளூ சட்டை மாறன் நேரடி அட்டாக்
சென்னை: நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா மற்றும் நடிகை திரிஷா ஆகியோரைக் சுற்றி கடந்த சில நாட்களாக உருவான சர்ச்சை இன்னும் அடங்காமல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய்யை அட்டாக் செய்து ப்ளூ சட்டை மாறன் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார் இது அதிகமாக கவனம் பெற்று வருகிறது.

விஜய் பற்றிய சர்ச்சை
விஜய் விவாகரத்து தொடர்பான தகவல்கள் வெளிவந்த சூழ்நிலையில் திரிஷாவுடன் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதும் இந்த விவகாரம் மேலும் பெரிதாகியது. அதிலும் அவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்ததால் ரசிகர்கள் மத்தியில் கூட பல கேள்விகள் எழுந்தன.
சிலர் இது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிவிட்டது என்று விமர்சித்தனர். இன்னும் சிலர் விஜய் அரசியலில் புதிய பயணத்தை தொடங்கியுள்ள நேரத்தில் இப்படியான விஷயங்கள் அவரின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினர். இந்த சூழ்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கூறிய ஒரு கருத்து மேலும் புதிய விவாதத்தை கிளப்பியது.
ஒரு நிகழ்ச்சியில் திரிஷா குறித்து கேட்கப்பட்டபோது "குந்தவை இந்த நேரத்தில் வீட்டில் குந்தவைக்கப்பட்டு இருந்தால் நல்லது" என்று அவர் கூறியிருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தை குறிப்பிட்டே அவர் இப்படிச் சொன்னதாக கூறப்பட்டது. இந்த கருத்து வெளியானதும் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.
திரிஷா போஸ்ட்
இதற்கு பதிலாக திரிஷா தனது சமூக வலைதளத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். "மைக்கில் பேசுவதாலே வார்த்தைகள் புத்திசாலித்தனமாக மாறிவிடாது. மரியாதையில்லாமல் பேசப்படும் வார்த்தைகள் யாரைப் பற்றி சொல்கிறார்களோ அவர்களைப் பற்றி சொல்லாது; அதை பேசுபவரைப் பற்றிதான் சொல்லும்" என்று அவர் பதிவு செய்திருந்தார்.
பார்த்திபன் விளக்கம்
சர்ச்சை பெரிதாகிய நிலையில் பார்த்திபன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை விளக்கினார். அதில் விஜய் தற்போது அரசியலில் வளர்ந்து வரும் நேரம் என்பதால் அவருக்கு எதிராக சர்ச்சைகள் உருவாகக் கூடாது என்பதைத்தான் தன்னுடைய ஆதங்கமாக கூறியதாக அவர் தெரிவித்தார். "ஒருவேளை திருமணத்திற்கு அழைத்திருந்தாலும் திரிஷா வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தனர் அதைத்தான் நானும் விஜயின் நலம் விரும்பியாக சொன்னேன் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு பார்த்திபன் கூறிய விளக்கமும் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. சிலர் அவர் சொன்னதில் தவறு இல்லை என்று ஆதரித்தனர். மற்றவர்கள் ஒரு நடிகையை பற்றி பொது மேடையில் இப்படி பேசுவது சரியல்ல என்று விமர்சித்தனர்.
ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்
இந்த விவகாரம் இவ்வாறு சூடு பிடித்துக் கொண்டிருக்கும்போது பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யை கடுமையாக கலாய்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் விஜய்யை "மௌன விரத மாஸ்டர்" என்று குறிப்பிட்டு பல விஷயங்களை பட்டியலிட்டு விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், மௌனவிரத மாஸ்டர்:
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வர சொல்வேன்.
* கரூரில் இறந்தோர் குடும்பத்தினரையும் பனையூருக்கு வர சொல்வேன்.
* கொள்கை தலைவர் பெரியார் பற்றி மிக இழிவாக யார் பேசினாலும்... நான் அவர்களை கண்டிக்க மாட்டேன்.
* கொள்கை தலைவர்கள் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் பற்றி அடிக்கடி பேசுவேன். காமராஜர், அம்பேத்கர், பெரியார் பற்றி 99% பேச மாட்டேன்.
* திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச மாட்டேன்.
* தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டதென வெறியாவேன். ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடுவேன் என கூற மாட்டேன்.
* லஞ்சம், ஊழல் பெருத்து போச்சு என கத்துவேன். ஆனால் என் படங்களுக்கு ப்ளாக் டிக்கெட் விற்பது, வாங்குவது பற்றி எந்த காலத்திலும் பேச மாட்டேன்.
* கீர்த்தி சுரேஷ் கல்யாணத்திற்கு போவேன். ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு போக மாட்டேன்.
* வீட்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருவேன். ஆனால் சிலிண்டர் விலை ஏறியது பற்றி பேச மாட்டேன்.
* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசம் என போராடுவேன். ஆனால் தமிழ்நாட்டிற்கு கல்விநிதி தராத மத்திய அரசை எதிர்த்து போராட மாட்டேன்.
* தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அடிக்கடி பொங்குவேன். ஆனால் த்ரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன்.
* ஜனநாயகன் சென்சார் பிரச்சனைக்கு காரணம் பாஜக அரசு என நாஞ்சில் சம்பத் பேசுவார். ஆனால் நான் வாய் திறக்க மாட்டேன்.
* கரூர் சிபிஐ விசாரணையை தமிழ்நாட்டில் நடத்த சொல்வேன். நான் இன்று டெல்லிக்கு வர முடியாது என காரணம் சொல்வேன்.
* ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட மாட்டேன்.
* ஒவ்வொரு கூட்டத்திலும்.. ஒழுக்கத்தை கடைபிடிக்காமல்.. முண்டியடித்து ஓடி வரும் அணில்குஞ்சுகளை கட்டுப்படுத்த மாட்டேன்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மற்றொரு தரப்பு இது தேவையற்ற விமர்சனம் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறது.
மௌனவிரத மாஸ்டர்:
— Blue Sattai Maran (@tamiltalkies) March 10, 2026
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வர சொல்வேன்.
* கரூரில் இறந்தோர் குடும்பத்தினரையும் பனையூருக்கு வர சொல்வேன்.
* கொள்கை தலைவர் பெரியார் பற்றி மிக இழிவாக யார் பேசினாலும்... நான் அவர்களை கண்டிக்க மாட்டேன்.
* கொள்கை தலைவர்கள் அஞ்சலை அம்மாள், வேலு… pic.twitter.com/vBO6F00ofg
-
ஆதவ் வாயை கட்டுங்க விஜய் இல்லன்னா பிரச்சனை..! எச்சரிக்கை விடுத்த ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி சர்ச்சையில் புதிய திருப்பம் -
சிம்பு விஜய்யை காலி பண்ணி இருப்பாரு.. ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் வேற மாதிரி ஆகிடும்..! பிரபலம் ஆதங்கம் -
சென்னை களம்! திமுகவுக்குச் சாதகமாக மாறும் விஜய்யின் வியூகம்? கமல் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கலாமே -
தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய் -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
கடிவாளம் போடாமல் ஆடவிட்ட விஜய்.. ரஜினிகாந்த் வைத்த ஆப்பு.. சிக்கலில் கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா! -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
தவெக தனித்தே போட்டி.. பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், புஸ்சி ஆனந்த் போட்டியிடும் தொகுதிகள் எது? -
Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம் -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியே கிடையாது.. விஜய் வெளிச்சத்தில் ஒட்டி இருக்கிறார்.. சாடிய இயக்குநர் அமீர்! -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
வார் ரூமுக்கு வந்த விஜய்.. தவெக சீனியர்களுடன் முக்கிய ஆலோசனை! வெளியே வந்ததும் செம உற்சாகம்! -
உங்க விஜய் நான் வர்றேன்.. தனித்தே களமிறங்கும் தவெக! எந்த தொகுதியில் யார் யார் போட்டி? லீக்கான தகவல்!













Click it and Unblock the Notifications