சோறு இல்லையா? ஈரோடு தவிட்டுப்பாளையம் பண்ணை வீடு ராஜகுமாரன்.. மகேந்திரனை தொட்டுக்கூட பார்க்க முடியாது
சென்னை: டைரக்டர் மகேந்திரன் நல்ல சிந்தனையாளர்.. நல்ல கருத்தோடு படங்கள்தான் எடுத்தார்... நல்ல புரொடியூசர் கிடைக்காததால் ஃபீல்டை விட்டே போய்விட்டார் எதார்த்தமான திரைப்பட இயக்குனநர் மகேந்திரன்.. சமூக அக்கறை நிறைந்தவர்" என்று பத்திரிகையாளர் தமிழா தமிழா புகழாரம் சூட்டியிருக்கிறார்.. அத்துடன் தேவயானி கணவர் ராஜகுமாரனையும் கடுமையாக பேட்டி ஒன்றில் விமர்சித்துள்ளார் பாண்டியன்.
Cine Kazhugu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "ஈரோடு மலைகிராமமான அந்தியூரில் இருந்து சினிமா ஆசையில் வெறும் 40 ரூபாயுடன் ரயில் ஏறியவர் ராஜகுமாரன்.. ஆனால் டிக்கெட் வாங்கவில்லை.. டிக்கெட் இல்லாமல் ரயிலில் வந்தபோது, டிடிஆர் அவரை பிடித்துவிட்டார்..

உடனே ராஜகுமாரன், தான் எழுதிய கவிதை புத்தகம் மற்றும் சினிமா கதை புத்தகத்தைக் காண்பித்து, நான் கண்டிப்பா சாதிப்பேன், என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க என்று கேட்டிருக்கிறார்.. இவரது ஆர்வத்தை கண்ட டிடிஆரும், "சரி, ஒழுங்காக படம் எடுக்கணும் என்று மிரட்டி அனுப்பினார். அப்படித்தான் சென்னை வந்தார்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றினார்.. முதல் படம் ராஜகுமாரனின் கான்செப்ட் என்னவென்றால் இரண்டு கதாநாயகன் ஒரு கதாநாயகி.. இதில் எடுத்த முதல் படம் ஹிட்டாகவும், 2வது படம் R. B. சௌத்ரியிடம் "விண்ணுக்கும் மண்ணுக்கும்" என்ற படத்தை எடுக்க வாய்ப்பு பெற்றார்..
ஆனால், டபுள் கதாநாயகர்கள் விக்ரமும், சரத்குமாரும் இருக்கும்போது, யாரையுமே படம் பிடிக்காமல் தேவயானையை மட்டுமே வளைத்து வளைத்து ஷூட்டிங் எடுத்தார்.. ஒருகட்டத்தில் கடுப்பான சரத்குமார் ராஜகுமாரை போட்டு தாக்கிவிட்டார்..
என் கேரக்டரை ஏன் ஷூட் செய்யவில்லை? விக்ரமை வைத்து ஏன் சீன்கள் எடுக்கவில்லை என்று கேட்டார்.. கடைசியில் அந்த படம் ஓடவேயில்லை.. தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.
தேவயானி என்ற முதலீட்டு முதலை
ஒரு திரைப்பட இயக்குநருக்கான தகுதியை ராஜகுமாரன் வளர்த்துக் கொள்ளாமல், தேவயானி என்கிற ஒரு பெரிய முதலீட்டை முதலை அடைவது எப்படி? என்று மட்டுமே யோசித்துள்ளார்.. அதனால் அந்த படம் ஃப்ளாப் ஆகிவிட்டது..
ஒருபேட்டியில் R. B. சௌத்ரி சொல்லும்போது, "விண்ணுக்கும் மண்ணுக்கும் எடுத்து, எனக்கு ரூ.7 கோடி போச்சு. ஆனால் ராஜகுமாரன் செட்டில் ஆவதற்கு என்னுடைய 6 கோடி பயன்பட்டது" என்று சொன்னார்.. அதற்கு பிறகு எந்த தயாரிப்பாளருமே ராஜகுமாரனிடம் செல்லவில்லை.
இறுதியில், வீட்டில் இருந்து தப்பி, சுவர் ஏறி குதித்து, ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டுவிட்டார் தேவயானி..
இப்போது ராஜகுமாரன் தவுட்டுப்பாளையம், அந்தியூரில் ஒரு பெரிய ஃபார்ம் ஹவுஸில் செட்டில் ஆகிவிட்டார். இப்போது இயக்குநர் மகேந்திரனுக்கு படம் எடுக்க தெரியவில்லை, பாரதிராஜாவுக்கு படம் எடுக்க தெரியவில்லை.. வெற்றி மாறனுக்கு எதுவுமே தெரியாது என்றெல்லாம் சொல்லி வருகிறார்.
சோறு போட மாட்டேன்
இந்த பேட்டிகளை பார்த்த தேவயானி "சோறு போட மாட்டேன்" என்று சொல்லிவிட்டாராம்.. பல இயக்குநர்கள் தரப்பில் இருந்து தேவயானிக்கு புகார் போன்கள் சென்றதாம்.. இதற்கு பிறகுதான் அமைதி காத்து வருகிறார் ராஜகுமாரன்.
சமூக வலைதளம் வந்தபிறகு, லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம், சொல்லலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. ஒருவர் தன்னுடைய கருத்தை சொல்ல முழு உரிமை உள்ளது.. அப்படியானால் மகேந்திரன் பற்றி தான் முதல் படம் இயக்கும்போதோ அல்லது 2 வது படம் இயக்கும்போதோ ராஜகுமாரன் கருத்து சொல்லியிருக்கலாமே?
தவிட்டுப்பாளையம் ராஜகுமாரன்
மகேந்திரன் நல்ல சிந்தனையாளர்.. நல்ல கருத்தோடு படங்கள்தான் எடுத்தார்... நல்ல புரொடியூசர் கிடைக்காததால் ஃபீல்டை விட்டே போய்விட்டார் எதார்த்தமான திரைப்பட இயக்குநர் மகேந்திரன்.. சமூக அக்கறை நிறைந்தவர்.
இப்படிப்பட்ட மகேந்திரனை பற்றி பேச தவிட்டுப்பாளையம் ராஜகுமாரனுக்கு தகுதியே இல்லை.. ராஜகுமாரன் போன்றவர்கள் "சேற்றை வீசி எரிவதற்கு சேறு கையில் இருந்தால் போதும்" என்ற அடிப்படையில் விமர்சிக்கிறார்கள்... அதுக்காக ராஜகுமாரன் திரைப்படத் துறையில் ஒரு பெரிய ஜாம்பவான் கிடையாது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications