Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்.. நேரடியாக இப்படி சொன்னாரு! இயக்குனர் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ், ஆரம்ப காலத்திலேயே எடுத்த சில முடிவுகள் தான் அவரை இன்றைய இடத்திற்கு கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான், "விஜய்க்கு தம்பியாக என்னால் நடிக்க முடியாது" என்று அவர் தெளிவாக சொன்ன சம்பவம். இந்த தகவலை சமீபத்தில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் பகிர்ந்தது, தற்போது ரசிகர்களிடையே மீண்டும் விவாதமாக மாறியுள்ளது.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தான் தனுஷ். அவரது உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மேல்படிப்பில் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த நேரத்தில், குடும்ப சூழ்நிலையும் கடன் சுமையும் கஸ்தூரி ராஜாவை கடுமையாக பாதித்திருந்தது. அந்த கட்டத்தில், மூத்த மகன் செல்வராகவனை நம்பி சில லட்சங்களை ஏற்பாடு செய்து துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தார்.

Dhanush Vijay

நடிகர் தனுஷின் நிஜ பெயர்

அந்த படத்தில் வெங்கடேஷ் பிரபுவை ஹீரோவாக அறிமுகப்படுத்தி, அவருக்கு தனுஷ் என்ற பெயரும் சூட்டப்பட்டது. படம் சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அதனால் கஸ்தூரி ராஜாவின் கடன் சுமை குறைந்தது மட்டுமல்ல, குடும்பம் மீண்டும் சென்னையில் நிம்மதியாக வாழும் நம்பிக்கையும் கிடைத்தது. அதன் பிறகு காதல் கொண்டேன் வெளியாகி, தனுஷின் இடத்தை சினிமாவில் உறுதியாக்கியது.

பகவதி பட அனுபவம்

இந்நிலையில், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் விஜயை வைத்து பகவதி படத்தை இயக்கிய போது, விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்கலாம் என்று யோசித்ததாக கூறினார். தயாரிப்பாளர்களும் கஸ்தூரி ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அந்த வாய்ப்பு பற்றி தனுஷிடம் பேசப்பட்டதாகவும் சொல்கிறார்.

அப்போது தனுஷ் மிக அமைதியாக, "எனக்கு அது சரியாக இருக்காது" என்று சொல்லியதாக கூறுகிறார் ஏ.வெங்கடேஷ். அவர் தொடர்ந்து தனுஷிடம், "விஜயகாந்துடன் விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தது போல, நீங்களும் விஜயுடன் நடித்தால் B, C சென்டர்களில் ரீச் ஆகும்"
என்று சொன்னாராம்.

நடிகர் தனுஷ் விளக்கம்

அதற்கு தனுஷ், "காதல் கொண்டேன் ரிலீஸ் ஆனால், நான் அப்படியே அந்த சென்டர்களுக்கு போய்விடுவேன்" என்று பதிலளித்தாராம். அந்த வயதிலேயே, ஹீரோவாக தான் பயணிக்க வேண்டும் என்ற தெளிவு தனுஷிடம் இருந்ததாக ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அதனால்தான், தொடக்கம் முதல் இன்று வரை தனுஷ் வேறு நடிகருடன் இணைந்து இரண்டாம் ஹீரோவாக எந்த படத்திலும் நடித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dhanush Vijay

தனுஷ் மறுத்து பிறகு தன் பகவதி படத்தில் விஜயின் தம்பியாக நடிகர் ஜெய் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இன்று தனுஷ், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு முன்னணி நடிகர். தேசிய விருது பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், ஹாலிவுட் வரை சென்ற தமிழ் நடிகர்களில் ஒருவராகவும் அவர் மாறியுள்ளார்.

சமீப காலத்தில் ஒரு படத்திற்கு 50-60 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். மறுபுறம், விஜய் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக நீண்ட காலமாக ரசிகர்களை கட்டிப் போட்டவர். லியோ, வாரிசு போன்ற படங்களுக்குப் பிறகு, அவர் சினிமாவை விட அரசியலில்தான் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதும், அவரது அரசியல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Dhanush Vijay

அதே நேரத்தில், ஜனநாயகன் படம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக விஜய் தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். இப்படியான சூழலில், ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியும் எழுகிறது. அன்றே தனுஷ் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஒருபக்கம் மாஸ் ஹீரோ விஜய், மறுபக்கம் வளர்ந்து வரும் இளம் நடிகர் தனுஷ். அந்த கூட்டணி அப்போது நடந்திருந்தால், அது அந்த காலகட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், தனுஷ் எடுத்த அந்த முடிவு தான், இன்று அவரை தனித்த அடையாளத்துடன் நிறுத்தியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+