Jyothika: ஜோதிகா நடித்த அந்த ஒரு காட்சி.. மொத்த படத்தையும் கெடுத்துடுச்சி.. இயக்குநர் ஆதங்கம்
சென்னை: நடிகை ஜோதிகா (Jyothika) நடித்த ஒரு முக்கிய காட்சி காரணமாகவே ஒரு படத்தின் மொத்த ஃபீல் மாறிப் போனது என்ற இயக்குநர் கிருஷ்ணா பேசிய பழைய பேட்டி தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில், சூர்யா - ஜோதிகா ஜோடியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் ஒரு காட்சி குறித்து கிருஷ்ணா வெளிப்படையாக பேசியிருக்கிறார். படம் வெளியான காலத்தில் ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட் ஆனாலும், அந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் பலருக்கு நெருடலாக இருந்தது என்பதும் அப்போது பேசப்பட்ட விஷயம் தான். இப்போது அந்த அனுபவத்தை கிருஷ்ணா நேரடியாக சொல்லி இருப்பது தான் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த காட்சியில் நடந்தது
'சில்லுனு ஒரு காதல்' படத்தின் கதையில், குந்தவை - கவுதம் வாழ்க்கையில் கவுதத்தின் முன்னாள் காதலி ஐஸ்வர்யா மீண்டும் வருவது ஒரு முக்கிய திருப்பமாக வரும். கதையின்படி, குந்தவை தான் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு வரவழைக்கிறார். ஆனால் இது கவுதமுக்கு தெரியாமல் நடக்கும் விஷயம்.
வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்ததும், கவுதம் குந்தவையிடம் இதைப் பற்றி சொல்ல தயங்குகிறார். அப்போது குந்தவை, "நான் தான் ஐஸ்வர்யாவை உன்னை பார்க்க வரச் சொன்னேன்" என்று சொல்லிவிட்டு, "நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன். உனக்காக பிடிச்சதை செய்வேன்" என்று மனம் திறந்து பேசிவிட்டு வெளியே செல்லத் தயாராகிறார்.
அந்த நேரத்தில், குந்தவை உணர்ச்சி வசப்பட்டு உடைந்து அழுவாள். இந்த காட்சியில் ஜோதிகா இயல்பாகவே ரொம்ப எமோஷனலாக ரியாக்ட் செய்து நடித்திருக்கிறார். அந்த டேக் முடிந்ததும் செட்டில் இருந்த அனைவரும் "சூப்பரா இருக்கு" என்று பாராட்டியதாக கிருஷ்ணா கூறியுள்ளார்.
இயக்குநருக்கு திருப்தி இல்லாத முதல் டேக்
ஆனால், அந்த முதல் டேக் இயக்குநர் கிருஷ்ணாவுக்கு மனதளவில் திருப்தி அளிக்கவில்லையாம். "குந்தவை தான் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு வரவழைத்தவள். அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டிய சூழல். அந்த நிலையில், அவள் அழுது கொண்டு வீட்டை விட்டு போனால், அடுத்து கவுதம் அவன் காதலியிடம் எப்படி நிம்மதியாக பேச முடியும்?
ஒரு கணவன்-மனைவி உறவில் அது ஒரு நெருடலான உணர்வை உருவாக்கும்" என்ற கோணத்தில் தான் அந்த காட்சியை இன்னும் நுணுக்கமாக காட்ட வேண்டும் என்று கிருஷ்ணா நினைத்தாராம்.
அதனால் ஜோதிகாவிடம் இன்னொரு டேக் எடுக்கலாம் என்று கேட்டபோது, அவர் ஏன் மீண்டும் எடுக்க வேண்டும் என்று காரணம் கேட்டதாகவும், அதன் பிறகு இயக்குநர் தனது எண்ணத்தை சொன்னாரா. உடனேஜோதிகாவும் அதை புரிந்து கொண்டு, இன்னொரு விதமாக அந்த காட்சியை நடித்துக் கொடுத்தாராம்.
எடிட்டிங்கில் நடந்த மாற்றம்
ஆனால், இறுதியில் எடிட்டிங் செய்யும் போது, கிருஷ்ணா விரும்பிய இரண்டாவது டேக் படத்தில் வைக்காமல், முதலில் எடுத்த டேக் தான் பயன்படுத்தப்பட்டதாம். இதைப் பற்றி அவர் கேட்டபோது, "இதுதான் நல்லா இருக்கு" என்று குழுவினர் சொல்ல, அனைவருக்கும் காட்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தாராம்.
டீமிருக்கும், முதலில் எடுத்த காட்சி தான் ஓகே என்று தோன்றியதால், இயக்குநரும் அதில் விட்டுக் கொடுத்தாராம். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு, அந்த காட்சி வரும் ஒவ்வொரு தியேட்டரிலும் பார்வையாளர்களிடம் இருந்து வந்த ரியாக்ஷன் அவருக்கு பெரிய பாடமாக அமைந்ததாம்.
"அந்த காட்சி வரும் போது தியேட்டரில் ஒரு விதமான அழுத்தம் தான் இருந்தது. யாரும் அந்த இடத்தை ரசிச்ச மாதிரி தெரியல. அப்போ தான் நான் செய்த தவறு என்னன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஒரு டைரக்டர் மனசில் எப்படி அந்த காட்சியை நினைக்கிறாரோ, அதை மாற்றாமல் எடுத்திருக்கணும். அப்போ தான் படம் முழுசா அவர் நினைச்ச மாதிரி வரும்" என்று கிருஷ்ணா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
காதல் ரசிகர்களின் ஃபேவரிட் படம்
2006ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல், காதல்-திருமணம்-முன்னாள் காதல் என்ற மூன்று கோணங்களையும் சேர்த்து சொன்ன ஒரு ரொமான்டிக் டிராமா படம். இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் பூமிகா (ஐஸ்வர்யா கேரக்டர்) முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியானதும் காதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பாடல்கள், குறிப்பாக "முன்பே வா" போன்ற பாடல்கள் இன்றளவும் கிளாசிக் லவ் சாங்ஸ் லிஸ்டில் இடம் பிடித்துள்ளன.
இப்படிப் பெரும் வெற்றி பெற்ற படத்திலேயே, "ஒரே ஒரு காட்சி தான் எனக்கு இன்னும் வருத்தம்" என்று இயக்குநர் வெளிப்படையாக பேசுவது, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இந்த படத்தை பற்றிய விவாதத்தை தூண்டி இருக்கிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications