கதிகலங்கி போவார்கள்.. இதை கொஞ்சம் யோசிங்க! ஜனநாயகன் படம் லீக் ஆனது பற்றி இயக்குநர் மோகன் ஜி ஆதங்கம்
சென்னை: விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை சுற்றி உருவாகி வரும் லீக் சர்ச்சை இப்போது பல கோணங்களில் பேசப்படும் பெரிய விவகாரமாக மாறி இருக்கிறது. ஆரம்பத்தில் சில காட்சிகள் வெளியானது என்று சொல்லப்பட்ட இந்த பிரச்சனை, தற்போது முழு படமே இணையத்தில் கசிந்தியிருக்கும் என்ற அளவுக்கு பெரிதாகி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் மோகன் ஜி ஆதங்கத்துடன் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

ஜனநாயகன் பட பிரச்சனை
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்த இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் நடித்திருக்காங்க. அனிருத் இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட படம், சென்சார் பிரச்சனையால் தாமதமாகி வந்தது.
லீக்கான ஜனநாயகன் பட காட்சி
இந்த தாமதம் நடந்து கொண்டிருக்கும்போதே, முதலில் சுமார் 5 நிமிட காட்சிகள் லீக்கானது. அதில் விஜய்யின் அறிமுகம், கிளைமாக்ஸ், பாடல் காட்சிகள்-இணையத்தில் லீக் ஆனது. அதற்குப் பிறகு முழு 3 மணி நேர படமே கசிந்திருக்கிறது என்ற தகவலும் பரவி, படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜனநாயகன் படம் லீக் ஆனது எப்படி
இந்த லீக் எப்படி நடந்தது என்பது குறித்து பலரும் பல விதமாக கருத்து சொல்ல ஆரம்பிச்சாங்க. இயக்குநர் மைக்கேல் அருண் கூறியதாவது, இது சாதாரண காப்பி அல்ல. 'Edit Reference' என்ற பிரதிதான் இருக்க வாய்ப்பு அதிகம். இந்த மாதிரி காப்பி இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ மாதிரி மிக முக்கியமான சில பேருக்குத்தான் அனுப்பப்படும். அதனால் இந்த லீக் வெளியில் இருந்து இல்ல, உள்ளிருந்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார்.
ஜனநாயகன் தயாரிப்பாளர் ஆதங்கம்
இதற்கிடையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுமையாக பேசி இருக்கிறார், முக்கிய காட்சிகள் மட்டுமல்லாமல் முழு படமே லீக் ஆகியிருப்பதாக தகவல்கள் வருவது மிகவும் கவலைக்குரியது என்றும், இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இணையத்தில் பரவும் அனைத்து லிங்குகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இயக்குநர் ஹெச் வினோத் பதிவு
இந்த சூழலில் இயக்குநர் ஹெச். வினோத் வெளியிட்ட உருக்கமான பதிவு இந்த விவகாரத்துக்கு உணர்ச்சி ரீதியான ஒரு கோணத்தை கொண்டு வந்தது. "ஒவ்வொரு காட்சியும் யாரோ ஒருவரின் கனவு. படம் வெளியாவதற்கு முன்பே லீக் ஆகுவது மிகவும் வேதனை. தயவு செய்து அதை பகிர வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் மோகன் ஜி வருத்தம்
இதோடு சேர்த்து, தற்போது இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட பதிவு இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக மாற்றி இருக்கிறது. அவர் தனது பதிவில் என்ன சொல்கிறார் என்றால், "எதிர்பார்ப்பு இல்லாத ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன் இணையத்தில் கசிந்தாலே அதை உருவாக்கியவர்கள் கதி கலங்கி போவார்கள். இவ்வளவு பெரிய படத்தின் காட்சிகள் இப்படி வெளியாகுவது, உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி. மன அழுத்தத்தை உருவாக்கும்... அவர்களிடத்தில் இருந்து யோசித்து இப்படி பரப்புவதை நிறுத்துங்கள் என்று கூறுகிறார்.
மேலும், இது சாதாரண லீக் இல்ல, திட்டமிட்டு நடக்கும் விஷயமாக இருக்கலாம் என்றும் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். மொத்தத்தில், 'ஜனநாயகன்' பட லீக் விவகாரம் இப்போது மூன்று முக்கிய கோணங்களில் பேசப்படுகிறது, உள்ளிருந்தே தகவல் கசிய்ந்திருக்கலாம் என்ற சந்தேகம், திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதலா என்ற கேள்வி, படக்குழுவின் உழைப்பையும், சினிமா தொழிலையும் பாதிக்கும் பெரிய பிரச்சனை என்பதுதான்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications