பிராமிஸ் செய்தும் KV ஆனந்த் மகள் கல்யாணத்துக்கு சூர்யா போகலயாமே? ஜோதிகா காதலுக்கு உதவிய டைரக்டர்
சென்னை: "கொடைக்கானலுக்கு நடிகர் சூர்யா ஷூட்டிங் வந்தும்கூட, கேவி ஆனந்த் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.. எப்படியும் திருமணத்துக்கு சூர்யா வந்துவிடுவார் என்று கேவி ஆனந்த் குடும்பத்தினர் நம்பியிருந்தனர். ஆனால், கடைசியில் விஜய் சேதுபதி மட்டும்தான் அந்த திருமணத்துக்கு சென்று கலந்து கொண்டு, பல உதவிகளையும் செய்துவிட்டுவந்தார்" என்று பத்திரிகையாளர் வெங்கடேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Madras Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், "சூர்யா ஒரு மாஸ் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை.. ஆனால், சூர்யாவுக்கு வில்லன் சூர்யாவேதான்.. மிகப்பெரிய அளவில் சூர்யா வளர்ச்சி பெற்றார்..

அயன் பட வெற்றிக்கு பிறகு கேவி ஆனந்த்துடன் மாற்றான் படம் தயாரானது, ஆனால் படம் நீளமாக இருந்ததால், அதை 20 நிமிடம் குறைப்பது என்று முடிவானது. ஆனால் படம் எடுத்த டைரக்டர் கேவி ஆனந்த்துக்குகூட தெரியாமல் தன்னுடைய நபர்களை வைத்து படத்தை எடிட் செய்துவிட்டார்..
கேவி ஆனந்த் - சூர்யா உறவு
பிறகுதான் சூர்யா தலையிட்டு எடிட் செய்திருப்பது தெரிரந்து கேவி ஆனந்த் வருத்தப்பட்டார்.. கடைசியில் மாற்றான் படமும் சரியாக போகவில்லை.. அப்போதே கேவி ஆனந்த்துக்கும், சூர்யாவுக்கும் இடையில் மிஸ்-அன்டர்ஸ்டேண்டிங் உருவாகிவிட்டது. பிறகு தன்னுடைய தவறை உணர்ந்த சூர்யா, கேவி ஆனந்த்தை சந்தித்து பேசினார்.. அதற்கு பிறகு காப்பான் என்ற படம் தயாரானது.
அந்த நேரத்தில் தன்னுடைய மகளுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைக்கணும், சினிமா துறையினரை திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்றெல்லாம் தன்னுடைய ஆசையை சூர்யாவிடம் சொல்லி கொண்டிருப்பாராம் கேவி ஆனந்த்.. ஆனால், கொரோனா பாதிப்பில் கேவி ஆனந்த் இறந்துவிட்டார். இந்த செய்தி வந்ததுமே யாராலுமே நம்ப முடியவில்லை.
பிராமிஸ் செய்த சூர்யா
அப்போது கேவி ஆனந்த் குடும்பத்தினரிடம் "என்னுடைய வளர்ச்சிக்கு உதவியவர் கேவி ஆனந்த்.. அவரது மகளின் திருமணத்துக்கு உதவி செய்கிறேன், திருமண ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்றார்..
அதன்படியே குடும்பத்தினர் மகளின் திருமணத்துக்கு ஏற்பாடுகளை செய்தனர்.. அந்த நேரத்தில் சூர்யா கங்குவா பட வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்தார்.. எனினும் சூர்யா வீட்டிற்கு சென்று, அங்கிருந்த சிவக்குமாருக்கு பத்திரிகை வைத்துள்ளனர்.. அதற்கு சிவக்குமார், திருமணத்தன்று மும்பை செல்கிறேன், அதனால் தன்னால் வரமுடியாது, சூர்யாவுக்கு கட்டாயம் தகவல் தந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
சர்ப்ரைஸ் தந்த விஜய் சேதுபதி
இதற்கு பிறகு, கொடைக்கானலுக்கு சூர்யா ஷூட்டிங் வந்திருப்பதாக கேவி ஆனந்த் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.. எனவே எப்படியும் திருமணத்துக்கு சூர்யா வந்துவிடுவார் என்று நம்பியிருந்தனர். ஆனால், கடைசியில் விஜய் சேதுபதி மட்டும்தான் திருமணத்துக்கு சென்றுள்ளார்.
கேவி ஆனந்த்தின் கவன் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.. திருமண பத்திரிகையை வைக்க வீட்டுக்கு வருகிறோம் என்று சொன்னபோதுகூட, விஜய் சேதுபதி வேண்டாம், வாட்ஸ்அப்பில் தேதி மட்டும் சொல்லுங்கள் என்றாராம். ஆனால், திருமணத்துக்கு உதவுவதாக பிராமிஸ் செய்துவிட்டுபோன சூர்யா, கொடைக்கானலில் இருந்தும் வரவில்லையாம்..
ஜோதிகாவுடன் காதல்
அதேபோல சூர்யாவின் வளர்ச்சிக்கு உதவியவர் கௌதம் வாசுதேவ் மேனன்.. காக்க காக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.. இந்த படத்தின்போதுதான் ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கும் லவ் இருக்கும் விஷயமே கௌதம் மேனனுக்கு தெரியவந்தது.. உடனே அவர்களது காதலுக்கும் ஆதரவை தந்தார்..
பிறகு வாரணம் ஆயிரம் படத்தை சூர்யாவுக்காக எடுத்தார்.. அப்போதுதான் ஜோதிகா-சூர்யா காதல், சிவக்குமாருக்கு தெரிந்து கோபப்பட்டார்.. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சூர்யா, கவுதம் மேனன் வீட்டில்தான் இருந்தார்.. பிறகுதான் சிவக்குமார் இந்த திருமணத்துக்கு சம்மதம் தந்தார். இதற்கு பிறகு கவுதம் மேனன், சூர்யா இணைந்து 3வது படம் எடுக்க முடிவானது..
சூர்யாவின் திடீர் அறிவிப்பு
அப்போது சூர்யா கவுதம் மேனனிடம், "படத்தின் பவுண்டட் ஸ்கிரிப்ட் வேண்டும், படித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்" என்று கேட்டுள்ளார்,. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கவுதம் மேனன், சற்று அமைதி காத்தார்.
உடனே சூர்யா, கவுதம் மேனன் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக திடீரென அறிக்கை வெளியிட்டார்.. இது கவுதம் மேனனுக்கு இன்னும் அதிர்ச்சியை தந்தது.. அதற்குபிறகுதான் இவர்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications