விஜய்யின் பதவியேற்ப்பை ஓரம்கட்டிய திருஷ்யம் 3.. ஜார்ஜ் குட்டி கம்பேக்! இந்த முறை சம்பவம் பெருசு!
சென்னை: மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான த்ரிஷ்யம் 3 படம் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மோகன்லால் நடித்தும், இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்திலும் உருவாகியுள்ள இந்த திரைப்படம், அதன் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்று விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்று இருக்கும் நிலையில் அந்த பரபரப்புக்கு மத்தியில் இந்த படத்தை பற்றிய பேச்சு சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது.

டிரெய்லர் வெளியீடு
'த்ரிஷ்யம்' தொடர் படங்களின் முக்கிய பலம் அதன் சஸ்பென்ஸ் மற்றும் திரைக்கதை அமைப்பே. அதே ஸ்ட்ராங்கை தக்கவைத்தபடி, இந்த மூன்றாம் பாகத்தின் டிரெய்லரும் உருவாகியுள்ளது. ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பம் மீண்டும் ஒரு பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் காட்டுகிறது. இதனால், இந்த முறை கதை எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்ப்பு
இந்த படம் வரும் மே 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளதால், ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய திரை விழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளிலேயே வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவுகிறது.
ரகசியங்களின் தொடர்ச்சி
முன்னைய இரு பாகங்களில் நடந்த சம்பவங்கள் ஜார்ஜ்குட்டி குடும்பத்தை எவ்வாறு மாற்றின என்பதற்கான தொடர்ச்சியாக இந்த மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. பழைய ரகசியங்கள் மீண்டும் மேலெழும் சூழல், போலீஸ் விசாரணையின் புதிய கோணங்கள், குடும்பத்திற்கு வரும் புதிய பிரச்சனைகள் போன்றவற்றை சுற்றிய இந்த மூன்றாவது பாகமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படம் வெறும் திரில்லர் மட்டுமல்லாமல், எமோஷனல் மற்றும் உளவியல் அழுத்தத்தையும் அதிகமாக எடுத்துரைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் மற்றும் படக்குழு
இந்தப் படத்தில் மோகன்லாலுடன் மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பே இந்த படத்தின் முக்கிய பலமாக இருந்து வருகிறது. குறிப்பாக குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் இவர்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தயாரிப்பு வேலைகளை ஆண்டனி பெரும்பாவூர் பாத்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகவும் படம் மிக உயர்ந்த தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தப் படத்திற்கு யு/ஏ 13+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படம் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பெரிய அளவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், இந்தி மொழியில் மீண்டும் உருவாக்கும் திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. உலகளாவிய உரிமைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் பான்-இந்தியா அளவில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய சாதனையை மிஞ்சுமா?
'த்ரிஷ்யம்' மற்றும் 'த்ரிஷ்யம் 2' படங்கள் இரண்டும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த மூன்றாம் பாகம் அந்த சாதனையை மிஞ்சுமா என்பது ரசிகர்களிடையே பெரிய கேள்வியாக உள்ளது. ஜார்ஜ்குட்டி கதைக்கு இது முடிவா அல்லது இன்னும் தொடருமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மொத்தத்தில், த்ரிஷ்யம் 3 ஒரு சாதாரண தொடர்ச்சி படம் அல்ல. இது ஒரு குடும்பத்தின் ரகசியங்கள், புத்திசாலித்தனம் மற்றும் உணர்ச்சிகளின் உச்சக்கட்ட மோதலை வெளிப்படுத்தும் படம். 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இது மாறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications