Durandhar Sara Arjun: விக்ரம் மகள்.. துரந்தர் படத்தில் ஹீரோயினியாக கலக்கும் சாரா அர்ஜுன் யார் தெரியுமா?
சென்னை: ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர்' படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று, 1300 கோடிக்கும் மேலே வசூலை அள்ளி இப்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும் பலரும் இந்த படத்தில் நடித்த கதாநாயகியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வேறு யாரும் இல்லை ரசிகர்கள் குட்டி பெண்ணாக பார்த்த சாரா அர்ஜுன்தான்.
சாரா அர்ஜுன்னு சொன்ன உடனே பல பேருக்கு ஒரு பழைய படம் ஞாபகம் வந்திருக்கும். ஆமாம், விக்ரம் நடிச்ச 'தெய்வத் திருமகள்' படத்துல குட்டி நிலாவா வந்து நம்ம மனசை கரைய வைத்த அந்தக் குழந்தை தான் இப்ப 'துரந்தர்' படத்துல ஹீரோயினா களம் இறங்கி இருக்கிறார்.

அப்போ கண்ணுல ஒட்டிக்கிட்ட அந்தக் குழந்தை இப்ப ஒரு முழு ஹீரோயினா மாறிட்டார்னு தெரிஞ்சதும் ரசிகர்களுக்கு ஒரே ஆச்சரியம். "காலம் எவ்வளவு சீக்கிரமா ஓடிடுச்சு"ன்னு சொல்ற அளவுக்கு, சாராவின் வளர்ச்சி தான் இப்ப எல்லாரும் பேசுற விஷயம்.
குழந்தை நட்சத்திரத்திலிருந்து ஹீரோயின் வரைக்கும்
சாரா அர்ஜுன் பிறந்தது 2005-ம் ஆண்டு. சின்ன வயசிலேயே, 18 மாதக் குழந்தையா இருக்கும்போதே டிவி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பிச்சவர். அப்புறம் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் வந்து, இந்தியா முழுக்கவே தெரிந்த முகமாக மாறினார்.
'தெய்வத் திருமகள்' படத்துல விக்ரமின் மகளா நடித்தபோது கிடைத்த அங்கீகாரம் தான் அவருக்குப் பெரிய திருப்புமுனை. அதுக்கப்புறம் இந்தி, தமிழ், தெலுங்கு படங்கள்ல தொடர்ந்து நடித்தார். 'சைவம்', 'சாண்ட் கி ஆன்க்', 'பொன்னியின் செல்வன்' மாதிரி படங்கள்ல அவர் நடித்தது பல பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கும்.
துரந்தர் பட அனுபவம்
துரந்தர் டிரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சியிலேயே சாரா தன்னோட அனுபவத்தை ஓபனாக பகிர்ந்தார்.
"இப்படி பெரிய நடிகர்களோட சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறதே எனக்கு ஒரு கனவு மாதிரி இருக்கு. இது எல்லாம் நிஜமா நடந்துக்கிட்டிருக்குதுன்னு சில சமயம் என்னையே கிள்ளிப் பார்க்க தோணுது. இந்த வாய்ப்பை கொடுத்த எல்லாருக்கும் நான் ரொம்பவே நன்றி சொல்லணும்"னு சொன்னார்.
இதைக் கேட்ட ரசிகர்களுக்கு, "இவருக்கு தலைக்கனம் இல்ல, சிம்பிளா பேசுறார்"னு ஒரு நல்ல இமேஜ் இன்னும் ஸ்ட்ராங்கா செட் ஆயிடுச்சு.

1,300 ஆடிஷன்களுக்கு பிறகு தேர்வு
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, இந்த வேடத்துக்காக இயக்குனர் குழு கிட்டத்தட்ட 1,300 ஆடிஷன்கள் பார்த்திருக்காங்க. அவ்வளவு பேரில் கடைசில தேர்வு ஆனது சாரா தான். சாராக்குள்ள ஏதோ ஒரு ஸ்பார்க் இருக்கு. இவர் வருங்காலத்துல பெரிய ராக்ஸ்டாரா மாறுவார்னு இயக்குனரே சொல்லியிருக்கார்.

மொத்தத்தில், 'துரந்தர்' வெளியானதுக்குப் பிறகு, ரன்வீர் சிங்குக்கு கிடைத்த கவனத்துக்கு இணையாக, சாரா அர்ஜுனுக்கும் கவனம் கிடைச்சிருக்கு. "இந்தப் பொண்ணு யாரு?", "இவர்தான் விக்ரம் மகளா நடித்தவரா?"ன்னு கேள்விகள் எல்லாம் ஒரே நேரத்துல கிளம்பி, சமூக ஊடகங்களில் சாரா பற்றி தேடல் ரொம்பவே அதிகமாகிடுச்சு.
தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு, ஓடிடியில் படம் வந்ததும், இந்த சாரா அர்ஜுன் என்ற பெயர் இன்னும் அதிகமா பேசப்படுகிறது. துரந்தர் படத்தின் ஹீரோயினா மட்டுமில்ல, இனி தமிழ் ரசிகர்களுக்கும் அவர் ஒரு புதிய 'கிரஷ்' ஆக மாற வாய்ப்பு இருக்கு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications