Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்ட்டி ஹீரோ கரண், பிரகாஷ் ராஜூக்கு இணையான சூப்பர் நடிகர்! மார்க்கெட்டை இழக்க இதுவே காரணம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் லைம்லைட்டிலேயே இல்லாவிட்டால் மார்க்கெட் பறிபோய்விடும் என்று இயக்குனர் பாரதி கண்ணன் கூறியிருக்கிறார்.. "வடிவேலுவை விட பெரிய காமெடி நடிகர்கள் வேறு கிடையாது.. வடிவேலு அளவுக்கு யோகிபாபுவிடம் எந்த அளவுக்கு காமெடி இருக்கிறது என்றும் தெரியாது. ஆனால், வடிவேலுவைவிட தாண்டி போய்விட்டார் யோகிபாபு.. டச்சிலேயே சினிமாவில் இருப்பதுதான் இதற்கு காரணம்" என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"கார்த்திக்கிடம் பணம் போனால் திரும்ப வராது என திரைத்துறைக்கே தெரியும்.. உங்களுக்கு தெரியாதா" என கார்த்திக் கூறியதாக டைரக்டர் பாரதி கண்ணன் சமீபத்தில் கார்த்திக் போலவே மிமிக்ரி செய்திருந்தார். .

Cinema Actor Karan Ilayaraja

கார்த்திக் பற்றின பேட்டி

இந்த பேட்டி, இணையத்தில் வைரலானது... ஆனால், இதுதொடர்பாக நடிகர்கள் பிரபு, ராதா ரவி ஆகியோர் பாரதி கண்ணனுக்கு போன் செய்து, இனிமேல் கார்த்திக் பற்றி இதுபோல் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களாம்.. உடனே பாரதி கண்ணனும், யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறியிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

இந்நிலையில், Unlimited Talks என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன், "நடிகர் கரண் திறமையான நடிகர்.. என்னுடைய படங்கள் கண்ணாத்தாள், ராஜராஜேஸ்வரி, பண்ணாரி அம்மன், திருநெல்வேலி என்று 4 படங்களிலும் தொடர்ந்து நடித்தார்..

நடிகர் கரண்

வில்லன் நடிகர்கள் பிரகாஷ் ராஜூக்கு இணையான நடிகராக கரணை சொல்லலாம்.. அவருடைய காலம் நேரம்தான் வாய்ப்புகள் வரவில்லை.. காரணம், ஹீரோவாகவே நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துவிட்டது.. 2, 3 படங்கள் ஹீரோவாக நடித்தது ஓடியது என்றாலும், சில படங்கள் ஓடவில்லை..

சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் டச்சிலேயே இருக்க வேண்டும்.. 10 வருடத்துக்கு ஒருவர் காணாமல் போய்விட்டால், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்..

வடிவேலுவை விட பெரிய காமெடி நடிகர்கள் கிடையாது.. வடிவேலு அளவுக்கு யோகிபாபுவிடம் எந்த அளவுக்கு காமெடி இருக்கிறது என்று தெரியாது. ஆனால், வடிவேலுவைவிட தாண்டி போய்விட்டார் யோகிபாபு.. தொடர்பிலேயே இருப்பதுதான் இதற்கு காரணம்.

தொடர் முயற்சியில் உதயா

என்னுடைய திருநெல்வேலி படத்தில் நடித்தவர் உதயா.. இப்போதும் அவர் போராடி கொண்டிருக்கிறார்.. ஆனால் சினிமாவில் திறமை இருந்தாலும், காலம்தான் அனைத்தையும் நிர்ணயம் செய்கிறது.. எனவே ஒருநாள் உதயா மேலே வருவார் என்று நம்புவோம்..


கரகாட்டக்காரி - இளையராஜா

கரகாட்டக்காரனுக்கு போட்டியாக கரகாட்டக்காரி எடுக்கவில்லை.. தொடர்ந்து நான் எடுத்த 2 படங்கள் பிளாப் ஆகிவிட்டது.. ஒரு தயாரிப்பாளர் என்னை நெருங்கி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னதால், நானும் தயாரானேன்,..

இளையராஜாவை வைத்து இசையமைத்துவிட்டால், படம் எப்படியாவது ஓடிவிடும் என்பதால், இளையராஜாவிடம் சென்றோம்.. கரகாட்டக்காரி பற்றின கதையை படமாக எடுக்கிறோம் என்றோம்.. உடனே இளையராஜா, கரகாட்டக்காரி என்றே வைத்து கொள்ளுங்களேன் என்றார்.. அந்தவகையில் கரகாட்டக்காரி பட டைட்டிலை இளையராஜாதான் வைத்தார்..

படத்தின் பாடல்களையும் அருமையாக போட்டு தந்தார்.. ஆனால், அந்த கதை, கதாநாயகி சரியாக அமையவில்லை.. பெரிய தோல்வியை தந்துவிட்டது.. அதனால், தெலுங்கு, கன்னடத்தில் நிறைய படங்களை எடுத்தேன்..

எதிர்நீச்சல் சீரியல்

எங்களது ஊர் பாவூர் சத்திரம் அருகிலுள்ள சுரண்டை என்ற ஊரில், பெரிய ஆறுமுகம் என்பவரது குடும்பத்தில் நடந்த சம்பவத்தின் இன்ஸ்பியரேஷன்தான் எதிர்நீச்சல் கதை.. இயக்குனர் திருச்செல்வத்தை அழைத்து சென்று, சுரண்டை நண்பரை அறிமுகம் செய்து வைத்தேன்.. அந்த குடும்பத்தின் சிறிய சம்பவத்தை வைத்து, பெரிய அளவில் கதையை உருவாக்கினார் திருச்செல்வம்.. வசனம் எழுதினார்..

சின்ன இன்ஸ்பியரேஷன் மட்டும் அங்கிருந்து எடுத்து, தன்னுடைய பாணியில் எதிர்நீச்சல் சீரியலை எடுத்து வருகிறார்.. தரமான சீரியலாக அது உருவெடுத்து வருகிறது. அதிலும் பெரிய நடிகர்களை வைத்து சினிமா பாணியில் உள்ளதால், மக்களின் மகத்தான வெற்றியை பெற்றுவிட்டது.. நன்றாக வசனம் எழுதக்கூடிய திறமை உள்ளவர் திருச்செல்வம் என்பதால், முதலிடத்தில் இந்த சீரியல் தக்க வைத்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+