பாரதிராஜா அனுப்பிய ஜிபே மெசேஜ்.. காசு இல்லாமல் தவிக்கும் இயக்குனர் இமயம்? ஓடி வந்த 3 எழுத்து பிரபலம்
சென்னை: மனோஜ் மரணத்துக்கு பிறகு பாரதிராஜா மிகவும் உடைந்து போய்விட்டார்.. மகனின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.. இந்நிலையில், பாரதிராஜா தற்போது எப்படி இருக்கிறார்? அவருக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், சமீபத்தில் பாரதிராஜா சகோதரர் ஜெயராஜை பேட்டி எடுத்திருந்தார்.

அப்போது ஜெயராஜ், "மகன் நினைவில் எப்போதும் கண்ணீர் வடித்து வருகிறார் பாரதிராஜா.. 3 வருஷங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை.. இப்போது மனவேதனையால் இன்னும் சோர்ந்துவிட்டார்.
பாரதிராஜாவின் நினைவுகள்
அவரது உடல் நிலை மற்றும் மகன் பற்றிய நினைவுகள் வரக்கூடாது என்பதற்காகவே, சினிமா துறையை சேர்ந்த யாரையும் நாங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை. மகனின் நினைவால் தன்னுடைய நினைவாற்றலை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்.
ஒருநாள் என் அண்ணன் பாரதிராஜா, என் கையை பிடித்து கொண்டு, உன்னை நான் என்னுடைய படங்களில் 10 - 15 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி இருந்தால், இன்று நீயும் ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பாய்... ஆனால் நான் அதை செய்ய தவறிவிட்டேன்... என்னை மன்னித்துவிடு என்று அழுதார் என்று கண்கலங்கி கூறியிருந்தார்..
மறக்க முடியாத மனோஜ்
பாரதிராஜாவுக்கு நினைவு குறைகிறதா? என்று பலரும் அதிர்ச்சியுடன் கேட்டு, இதுகுறித்து சோஷியல் மீடியாவிலும் அந்த நேரத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் தற்போதைய உடல்நிலை, அவரது மகன் மனோஜின் மறைவிற்குப் பிறகு அவர் எதிர்கொள்ளும் தனிமை மற்றும் பணப் பிரச்சனைகள் குறித்து வலைப்பேச்சு அந்தணன் விரிவாக பேசியிருக்கிறார்,..
Rertro Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் அந்தணன், "பாரதிராஜா தனது மகன் மனோஜின் மறைவிற்கு பிறகு மிகவும் தளர்ந்து போயுள்ளார்.,. இதன் காரணமாக அவருக்கு ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
பணமின்றி அவதிப்படும் பாரதிராஜா?
பாரதிராஜாவின் மனைவி இருக்கிறார்.. அதேபோல அவரது மகள் மலேசியாவில் வசிக்கிறார். ஆனாலும் வீட்டில் பாரதிராஜாவை பார்த்துக் கொள்ள நெருக்கமான பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் அருகில் இல்லாததால் அவர் மிகுந்த தனிமையை உணர்கிறார். மகன் இல்லாத நிலையில், மருமகள் வரவும் பெரிதாக வாய்ப்பில்லை.
பெரும்பாலும் வயதானவர்களிடம் பணம் இருக்கும்போது அதை அவர்களால் பாதுகாப்பாகவும், சரியாகவும் வைத்துக்கொள்ள முடியாது.. யாராவது உதவின்னு கேட்டாலே மனசு கேட்காமல் எடுத்து தந்துவிடுவார்கள்.. அதனால் வயதானவர்களிடம் பணம் யாரும் தர மாட்டார்கள்,
ஜிபே மெசேஜ்
அதுபோல பாரதிராஜாவுக்கும் பணத்தேவை இருப்பதாகக் கூறப்படுகிறது. தன்னைத் தேடி வந்து உதவி செய்பவர்களிடம் உணர்ச்சிவசப்பட்டுப் பணத்தை கொடுத்துவிடுவதால், இப்போது அவரிடம் பணப்புழக்கம் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது..
பணத் தேவைக்காகத் தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பாரதிராஜா அவ்வப்போது தகவல் அனுப்பி பணம் கேட்பதாக தெரிகிறது. இது உண்மையான தகவலா தெரியவில்லை.. பாரதிராஜாவின் செல்போனில் இருந்து பணம் கேட்டு சிலருக்கு மெசேஜ் செல்வதாக சொல்கிறார்கள்.
ஓடி வந்து உதவிய தனுஷ்
ஆனால் ஒருமுறை நடிகர் தனுஷைத் தொடர்பு கொண்டு உதவியை கேட்டுள்ளார். தனுஷ் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், யாரிடமும் கொடுக்காமல் பாரதிராஜாவின் அதிகாரப்பூர்வ கணக்கிற்கே நேரடியாகப் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் தொடர்ந்து ஜிபே அனுப்பும்படி, பாரதிராஜாவின் செல்போனில் இருந்து மெசேஜ்கள், சினிமா துறையில் உள்ளவர்களுக்கு செல்கிறதாம்.
பாரதிராஜாவின் வயது மற்றும் ஞாபக மறதியைப் பயன்படுத்தி அவருக்கு அருகில் இருப்பவர்கள் சிலர் அவரது மொபைலில் இருந்து மற்றவர்களுக்குப் பண உதவி கேட்டு மெசேஜ் அனுப்புகிறார்களா? அந்தப் பணம் பாரதிராஜாவுக்கும் போகாமல், வேறு ஒருவருக்கு சென்று கொண்டிருக்கிறதா? பாரதிராஜாவை யாராவது மிஸ்யூஸ் செய்கிறார்களா? தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்,
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications