Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹீரோக்கள் ரூ.150 கோடி சம்பளம் வாங்கி.. தயாரிப்பாளர்களையே காலி பண்ணிட்டாங்க: திருப்பூர் சுப்பிரமணியம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கியவர்கள் இன்று பணியின்றி வீட்டில் உள்ளனர் என்றும், அவர்களால் தயாரிப்பாளர்கள் காலாவதி ஆகிவிட்டனர் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை தந்து வருகிறது. அதுமட்டுமல்ல, சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள் என்று பேசியிருப்பதும் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர். திருப்பூர் சுப்ரமணியம் சில நாட்களுக்கு முன்பு பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார்.

Cinema Heroes Tiruppur Subramaniam

அதில், "இந்த 2025ம் வருடம் வருடம் இதுவரை 187 படங்கள் வெளிவந்திருக்கிறது.. இதில் 18 சதவீதம் கூட வெற்றி கிடையாது.. முதல் வரிசை நடிகர்களின் படங்கள் கூடசரியாக ஓடுவதில்லை..

தயாரிப்பு செலவுகள், நடிகர், நடிகைகளின் சம்பளம் எல்லாமே விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. அதிலும் ஓடிடி பிளாட்பாரத்தில் படங்களை வாங்க ஆரம்பித்துமே, நடிகர்கள் தங்கள் சம்பளங்களை கன்னாபின்னாவென்று உயர்த்தி விட்டார்கள்.

ஓடிடி சாட்டிலைட்

2024 நவம்பர், டிசம்பர் ஓடிடி சாட்டிலைட் என எல்லாருமே கதவை அடைத்துவிட்டார்கள். இதனால் பெரிய சம்பளம் வாங்கிய பெரிய நடிகர்களின் படங்களையே வெளியிட முடியவில்லை.. ஓடிடி பிளாட்பார்ம்கள் வந்ததிலிருந்தே, சேட்டிலைட் சேனல்களுக்கு பாதிப்பாகிவிட்டது.

தியேட்டர்களில் நன்றாக ஓடுவதை வைத்து, அங்கு வசூலாவதை வைத்துதான் ஓடிடியில் வாங்குகிறார்கள்.. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் ஓடிடி, சாட்டிலைட்களிலிருந்து வருமானம் வரவில்லை. தியேட்டர்களிலிருந்தும் பணம் வருவதும் குறைந்துவிட்டது" என்றெல்லாம் வேதனையுடன் கூறியிருந்தார்.

ரூ.100 கோடி சம்பளம்

இந்நிலையில், திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது அவர் சொல்லும்போது, "100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கியவர்கள் இன்று பணியின்றி வீட்டில் உள்ளனர். காரணம் அப்படி சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு படங்கள் முழுமையாக இல்லை. இதற்கு காரணம் பெரிய நடிகர்கள் தான்‌. 8 வாரம் கழித்து தான் ஓடிடி வெளியீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் ஆனால் இதன் பாதிப்பு இன்று தெரிகிறது. யாருடைய படமும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

நடிகையின் ஹேர் ஸ்டைலர், ஹீரோவின் பவுன்சர்

நடிகை சிகை அலங்கார நிபுணருக்கு 1 நாள் பேட்டா 25 ஆயிரம், ஹீரோ பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால் பல தயாரிப்பு நிறுவனங்கள் முடிந்து விட்டது.

AVM போன்ற நிறுவனங்கள் இன்று சொந்த படம் எடுக்க விரும்புவதில்லை. தென்னிந்திய சினிமா அதல பாதாளத்தில் உள்ளது. இதனை சரி செய்ய தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்பு நேரடி கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யப்படும். இனி நடிகர்களுக்கு சம்பளம் கிடையாது‌ . விகிதாச்சார அடிப்படையில் தான் ஊதியம் என்பதே எங்கள் முடிவு.

கமல், அஜித், சிம்பு , சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பி.வி.ஆர் குழுமம் கூட நஷ்டத்தில் தான் இயங்குகிறது.

பெரிய ஹீரோக்கள் - சிறு படங்கள்

பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை நல்ல படியாக வைத்துக் கொள்ளுங்கள், அநாவசிய செலவுகளை தவிர்த்தால் சினிமா தொழில் சிறக்கும். சிறு படங்கள் எடுப்பவர்கள் கூட கதைக் கருவை மையமாக வைத்து எடுக்கின்றனர். ஆனால் பெரிய படங்களில் நடிகர்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள்.

கர்ணன், ஆயிரத்தில் ஒருவன், கில்லி, சச்சின் போன்ற ஒரு சில படங்கள் தான் ரீ ரிலிசில் சாதித்தன. இப்போதைய நடவடிக்கை மூலம் கூடுதல் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள்" என்றெல்லாம் தற்போதைய சூழல் குறித்து பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+