ஈசிஆரில் பீச் ரிசார்டில் சுந்தர் சி க்கு வந்த பயம்.. ரஜினி, கமலின் தலைவர் 173 படத்தினால் மனச் சுமை?
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, தமிழ்த் திரையுலக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்தது.. அதாவது ஈசிஆர் ரோட்டில், ஒரு பீச் ரிசார்ட்டில், சுந்தர் சி-க்கு இந்த படத்தின் டிஸ்கஷனுக்காக ரூம் போட்டு தந்துள்ளனர்.. சுந்தர் சியும், தன்னுடைய உதவியாளர்களுடன் இந்த படத்துக்கான கதையை விவாதம் செய்து கொண்டிருந்துள்ளார்.. இந்த விவாதத்தில்தான் சில பிரச்சனைகள் வெடித்ததாக சொல்கிறார்கள்.

கமலின் சிபாரிசு
அதாவது, ரஜினியிடம் இந்த படத்துக்காக சுந்தர் சி-யை சிபாரிசு செய்ததே கமல்ஹாசன்தானாம். ஆனால், ரொம்ப வருடத்துக்கு முன்பிருந்த டைரக்டரான சுந்தர் சி, தற்போதைய சூழலுக்கு சரியா வருமா? என்று கமலிடம் ரஜினி கேட்டாராம்.
ஏனென்றால் லோகேஷ் கனகராஜ், நெல்சன், திலீப்குமார், கார்த்திக் சுப்புராஜ் என்ற புது இயக்குனர்களுடன்தான் ரஜினி படங்களை செய்து வருகிறார்.. மற்றபடி சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார் போன்றோருடன் படங்களை செய்வதில்லை. அந்தவரிசையில்தான், சுந்தர் சியையும் சொல்லி லேட்டஸ்ட் டிரண்ட்டுக்கு சரியா இருக்குமா? என்று கமலிடம் கேட்டுள்ளார் ரஜினி.
அதற்கு கமல், திட்டமிட்டபடி, பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட நேரத்திற்குள் படத்தை முடிக்க வேண்டுமானால் சுந்தர் சிதான் சரியாக இருப்பார் என்றாராம்.
2 கதைகளும் திருப்தியில்லை
உடனே ரஜினியும், சுந்தர்சியிடம் 2 கதைகளை கேட்டுள்ளார்.. இதில் முதல் கதை ரஜினிக்கு திருப்தியாக இல்லை.. இதை சுந்தர் சி-யிடமே நேரடியாக ரஜினி சொல்லிவிட்டார். பிறகு 2 வது கதையை மீண்டும் ரஜினியை சந்தித்து சொல்லி உள்ளார்.. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ளது.
2வது கதையை கேட்ட ரஜினி, பதில் எதுவும் சொல்லாமல் சுந்தர் சி யை அனுப்பி வைத்துவிட்ட ரஜினி, கமலுக்கு போன் செய்துள்ளார்.. 2 கதைகளுமே ரஜினிக்கு திருப்தி இல்லை, வேறு கதை உள்ளதா? என்று சுந்தர் சி-யிடம் தயங்கி தயங்கி கேட்டாராம் கமல். அப்போதுதான், ரஜினிக்கு தன்னுடைய படத்தில் நடிப்பதில் முழு உடன்பாடில்லை என்று சுந்தர் சி உணர்ந்துள்ளார்..
சுந்தர் சி க்கு வந்த பயம்
இனி வேறு வேறு கதைகளை சொன்னாலும், அது திருப்திகரமாக அமையும்? கதை தலையீடுகள் இருந்து படம் ஓடாவிட்டால் என்ன செய்வது? லோகேஷ் கனகராஜூக்கு படம் தருவதற்கு தற்போது பலரும் தயங்கும்போது, அப்படியொரு நிலைமை தனக்கும் வந்துவிட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் சுந்தர் சிக்கு பயம் வந்துள்ளதாக தெரிகிறது.
இதற்குபிறகுதான், அந்த புராஜக்ட் வேண்டாம் என்று நினைத்து, தன்னுடைய முடிவை 2 நாட்களுக்கு முன்புதான் கமலிடம் சுந்தர் சி சொல்லி உள்ளார்.. அதற்கு பிறகே தன் முடிவை சுந்தர் சி அறிவித்தார்.
கெட்ட பெயர் தேவையா?
கமல், ரஜினி, சுந்தர் சி மூன்று பேரும் சேர்ந்த போட்டோக்களும் கடந்த வாரம்தான் வெளியானது.. ஆனால் கமல், ரஜினி இருவரின் கதை தலையீடும், ஒருவித மன சுமையை சுந்தர் சிக்கு தந்துவிட்டதாக தெரிகிறது.
ரஜினி, கமல் இருவர் சொல்வதையும் கேட்டு, படத்தை அதற்கேற்றவாறு மாற்றி எடுத்து, அந்த படம் சரியாக வராமல் போனால், கமல், ரஜினி இரு ரசிகர்களிடமும் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.. அதனால் படத்தை எடுத்து கெட்ட பெயர் வாங்கி கொள்வதைவிட, இப்போதே கவுரவமாக விலகி கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது என்பது அவர்கள் 3 பேருக்குதான் தெரியும்" என்றெல்லாம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
