அன்னக்கிளி முதல் என் இனிய பொன் நிலாவே வரை.. இளையராஜாக்கு ‘இந்த’ 900 பாடல்களுக்கு உரிமை இல்லையா?
சென்னை: இந்திய சினிமாவின் இசை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கும் இளையராஜா (Ilaiyaraaja ) தொடர்பான காப்பிரைட் வழக்கு தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களின் உரிமை தொடர்பாக சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அவர் இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை பயன்படுத்தவும், அவற்றின் மீது உரிமை கோரவும் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அது எந்தெந்த படங்கள் பாடல்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இளையராஜாவின் பயணம்
1970-களில் இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, தனது முதல் படமான அன்னக்கிளி மூலம் தமிழ்சினிமாவுக்கு முற்றிலும் புதிய இசை மொழியை கொண்டு வந்தவர். அந்தப் படத்தின் பாடல்களே அவரை முன்னணி இசையமைப்பாளராக உயர்த்தியது. ஆனால் தற்போது அதே அன்னக்கிளி படத்தின் பாடல்களே தடை செய்யப்பட்ட 134 படங்களின் பட்டியலில் இருப்பது இசை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி பார்க்கும்போது, 1976 முதல் 2001 வரை இளையராஜா இசையமைத்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் அந்தப் படங்களின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. அதனால் அந்த பாடல்களின் சட்டபூர்வ உரிமை தங்களிடமே உள்ளது என்று சரிகம நிறுவனம் நீதிமன்றத்தில் ஆவணங்களுடன் விளக்கம் அளித்துள்ளது. காப்புரிமை சட்டப்படி ஒரு படத்தின் பாடல்களுக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இளையராஜா வழங்கிய நோட்டீஸ்
மற்றொரு புறம், இந்த பாடல்கள் தனது இசையில் உருவானவை என்பதால் அவற்றின் உரிமை தனக்கே சொந்தம் என்றும், அனுமதி இன்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் இளையராஜா பல டிஜிட்டல் தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் Amazon Music, iTunes, JioSaavn போன்ற தளங்களுக்கு பாடல்களை வழங்கியதும் சரிகம தரப்பில் சட்டவிரோதம் என சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த 134 படங்களின் பட்டியலில் பல முக்கியமான மற்றும் காலத்தால் அழியாத படங்கள் இடம் பெற்றுள்ளன. 16 வயதினிலே, முள்ளும் மலரும், ரெட்டைவால் குருவி, கிழக்கே போகும் ரயில், மூடுபனி போன்ற படங்களின் பாடல்கள் இதில் அடங்கும். குறிப்பாக மூடுபனி படத்தில் வரும் "என் இனிய பொன் நிலாவே" போன்ற பாடல்களும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
134 படங்கள்
இந்த 134 படங்களில் மொத்தம் 900-க்கும் மேற்பட்ட பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் இளையராஜாவின் இசை அடையாளமாக கருதப்படும் படைப்புகள் என்பதால், "தான் உருவாக்கிய இசையை அவரே பயன்படுத்த முடியாத நிலை" என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
தன் பாடல்களின் காப்பிரைட் பிரச்சனைக்காக தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி வந்த இளையராஜாவுக்கே தற்போது இந்தத் தடை வந்திருப்பது இசை உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைஞரின் படைப்பின் உரிமை யாருக்கு? தயாரிப்பாளருக்கா? இசையமைப்பாளருக்கா? என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது.
இந்த வழக்கு அடுத்த கட்டத்தில் எந்த திசையில் செல்லும், இளையராஜா மேல்முறையீடு செய்வாரா, இந்த 134 படங்களின் பாடல்களின் எதிர்காலம் என்ன என்பதெல்லாம் தற்போது இசைத் துறையிலும், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications