சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்? அண்ணா நகர் வீடு இப்போதானே விற்றாரு.. அதற்குள் இப்படியா? காரணம் இதுதானா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீடு இடிக்கப்படவுள்ளதாக கூறப்படும் இந்த தகவல், ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் விஜயின் சாலிகிராமம் வீடு
இந்த சாலிகிராமம் வீடு, விஜய்யின் குடும்பத்துடன் நெருக்கமாக இணைந்த முக்கியமான இடமாக இருந்தது. இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது அலுவலகத்தை இங்கு தான் கவனித்து வந்தார். அதேபோல், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் தனது இசை ஸ்டூடியோவையும் இவ்விடத்தில் நடத்தி வந்ததாக ஏற்கனவே பேட்டியில் பேசி இருக்கிறார்.
விஜய் ஆண்டனி உருக்கம்
தனக்கு ஆபிஸ் இல்லாத போது விஜய்யும், அவருடைய அப்பா சந்திரசேகரும் தான் அந்த வீட்டில் தங்கி கொள்ள சொன்னதாகவும், தான் அந்த வீட்டில் சில சேஞ்சஸ் செய்த போது கூட விஜயோ அல்லது அவருடைய அப்பாவோ என்னிடம் எந்த கேள்விகளுமே கேட்டதில்லை .அது என்னுடைய சொந்த வீடு போலத்தான் அவர்கள் என்னை பயன்படுத்த விட்டிருந்தார்கள் என்று பெருமையாக பேசி இருந்தார்.
விஜய் அப்பா கொடுத்த அன்னதானம்
இந்த வீட்டில் சமூக சேவையாக தினசரி அன்னதானம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த வீடு குடும்பத்திற்கும் அப்பகுதி மக்களுக்கும் முக்கியமான இடமாக இருந்து வந்தது.
விஜய் வீடு இடிப்பு
இந்நிலையில், அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடம் காலப்போக்கில் பழமையான நிலையில் மாறியிருப்பதும், இதனால் அதை மாற்றி விட்டு புதியதாக அந்த இடத்தில் வீடு கட்ட போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே இந்த இடிப்பு பணிகளை தொடங்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் சூழலில் பின்னர் தேவையற்ற விமர்சனங்கள் எழாமல் இருக்க முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதற்கிடையில், விஜய் சமீபத்தில் அண்ணாநகர் பகுதியில் இருந்த தனது மற்றொரு வீட்டை சுமார் 35 கோடி ரூபாய்க்கு விற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த விற்பனைக்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டாலும், இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
மொத்தத்தில், சாலிகிராமம் வீட்டை இடித்து புதிய கட்டிடம் அமைக்கும் திட்டம் என்பது ஒரு சொத்து மேம்பாட்டு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்த வீட்டுடன் இணைந்திருந்த பழைய நினைவுகள் காரணமாக இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications