Jana nayagan: ஜனநாயகன் சென்சார் பற்றிய கேள்வி.. டக்குனு வையாபுரி கொடுத்த பதிலடி.. விஜய்க்கு நோஸ்கட்
சென்னை: நடிகர் வையாபுரி இன்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சமீப காலமாக ஜனநாயகன் படம் வெளியாவதில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் வையாபுரி பேட்டி
இதற்கு பதிலளித்த வையாபுரி, "ஒரு பிரச்சனை என்றால், அத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் தான் முதலில் பேச வேண்டும். ஒரு படத்திற்கு சிக்கல் என்றால், அந்த படத்தின் தயாரிப்பாளர் பேச வேண்டும், இயக்குநர் பேச வேண்டும், அந்த படத்தில் நடித்த கதாநாயகன் அல்லது கதாநாயகியும் பேச வேண்டும். இதில் சம்பந்தமே இல்லாமல் நான் கருத்து சொல்ல என்ன இருக்கிறது?" என்று தெரிவித்தார்.
மேலும், விஜய்க்கு ஆதரவாக சினிமாத்துறையிலிருந்து ஏன் பலர் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "முதலில் சம்பந்தப்பட்ட நபரே, 'எனக்கு இப்படிப் பிரச்சனை இருக்கிறது, இந்த படம் வெளியாகாமல் இருந்தால் தயாரிப்பாளருக்கு பாதிப்பு ஏற்படும்' என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஆனால் அவர் எதையும் சொல்லாமல் அமைதியாக இருக்கும்போது, நாங்கள் வெளியே இருந்து பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறினார்.
படங்களுக்கு பிரச்சனை
இதற்கு முன்பும் இதுபோன்ற வந்த பிரச்சனைகளை பற்றி வையாபுரி பேசும்போது, "இதற்கு முன்பும் சில படங்களுக்கு பிரச்சனை வந்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் குரல் கொடுத்தார்கள். அப்போது தான் நாங்களும், பல நடிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தோம். ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிப்பதற்கோ, ஆதரவாக பேசுவதற்கோ நாங்கள் தயங்குகிறோம்" என்று பேசி இருக்கிறார்.
ஜனநாயகன் சென்சார் பிரச்சனை
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், சில காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாக சென்சார் குழு விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதனால் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
'ஜனநாயகன்' பட தணிக்கை சான்று.. வழக்கை வாபஸ் பெறுகிறது தயாரிப்பு நிறுவனம்! வெளியான அப்டேட்!
வையாபுரியின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் பிரச்சனைகள் வரும் போது நடிகர்கள் யார், எப்போது குரல் கொடுக்க வேண்டும் என்பதைக் குறித்து அவரது பேச்சு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது. சிலர் அவரது கருத்தை ஆதரித்து பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்பினர், முன்னணி நடிகர்கள் சமூக பொறுப்புடன் செயல்பட்டு துறையில் ஏற்படும் பிரச்சனைகளில் தலையிட்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications