'ஜனநாயகன்' பட தணிக்கை சான்று.. வழக்கை வாபஸ் பெறுகிறது தயாரிப்பு நிறுவனம்! வெளியான அப்டேட்!
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கே.வி.என்.புரொடெக்ஷன் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன், இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

ஜனநாயகன் சர்ச்சை
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஜனநாயகன் திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி, கடந்த டிச. 22 அன்று திரைப்படத்திற்கு யு/ஏ (16+) சான்றிதழ் வழங்கியது. தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், பாதுகாப்புப் படைகளை எதிர்மறையாக சித்தரிப்பது மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துவது போல காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருக்கிறது என்று கூறி, ஜனவரி 5 அன்று தணிக்கை வாரியம் படத்தை திருத்தக்குழுவுக்கு அனுப்பியது.
வெளியீடு தாமதம்
இது வெளியீட்டை தாமதப்படுத்தியது. ரூ.500 கோடியில் உருவான இந்த திரைப்படம், பொங்கல் ரேசில் பங்கேற்க வேண்டும் என்று யோசித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9 அன்று முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, வாரியம் 2 வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனநாயகன் வழக்கு
ஆனால், வாரியம் அப்பீல் செய்து ஸ்டே பெற்றது. தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால், உயர் நீதிமன்றத்தையே நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இப்படி இருக்கையில் ஜன.27 அன்று, உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதிகள் அமர்வு ஒற்றை நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. தணிக்கை வாரியத்துக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவிட்டது. இது வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தியது. இப்படி இருக்கையில்தான் வழக்கை திரும்ப பெறுவதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காரணம் என்ன?
வழக்கு காரணமாக பட வெளியீடு தள்ளிப்போவதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்துடனான சட்டப் போராட்டத்தால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது. நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவது படத்தை இன்னும் காலதாமதப்படுத்தும் எனத் தயாரிப்புத் தரப்பு கருதுகிறது.
ரசிகர்கள் கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரித்தால் அதற்குப் பல வாரங்கள் ஆகலாம். அதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு குழு முன்பாகச் சென்றால் 10 முதல் 20 நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.
இதற்கிடையில், சோசியல் மீடியாக்களில்.. விஜய் ரசிகர்கள், "சட்டப் போராட்டத்தைத் தவிர்த்துவிட்டு, தணிக்கை வாரிய நடைமுறைகளைப் பின்பற்றி படத்தை விரைவில் வெளியிடுங்கள்" என்று தயாரிப்பாளர்களுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவேதான் தயாரிப்பு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுக்க இருக்கிறது
-
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான் -
நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால் -
TVK Vijay: மக்கள் சந்திப்புக்கு தடையா.. விஜய் அதிரடி முடிவு.. மார்ச் 12 தவெக செய்ய போகும் சம்பவம் -
சொந்த குடும்பத்தையே கைவிட்டுட்டாரு.. மோசம்.. விஜய்க்கு எதிராக திரும்பும் கிறிஸ்துவ சென்டிமென்ட்! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
அது வேற வாய்.. பெண்களுக்கு உதவித் தொகை! விஜய் முன்னிலையிலேயே விமர்சித்த அருண் ராஜ்! இப்போ பேசுவாரா? -
"உயிர் முக்கியம் பிகிலு”.. தவெக தலைவர் விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு நடிகர் விமல் அட்வைஸ்! -
வீதிக்கு வந்த விஜய் குடும்ப பிரச்சனை.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி போஸ்ட்! இப்படி சொல்லிட்டாங்களே!












Click it and Unblock the Notifications