Jana Nayagan: நேற்று மலேசியாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி.. பின்னணி கதை இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் நடைபெற்றது. 'தளபதி திருவிழா' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த விழாவில், விஜய்யின் வருகை முதல் அவரது பேச்சு, பாட்டு, டான்ஸ் வரை ஒவ்வொரு தருணமும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். வெளிநாட்டு மண்ணில் நடைபெற்றாலும், இது முழுக்க முழுக்க ஒரு தமிழ் திருவிழா போலவே காட்சியளித்தது. விஜய்யின் ஒவ்வொரு அசைவிற்கும், ஒவ்வொரு வார்த்தைக்கும் ரசிகர்கள் ஆரவாரமாக பதிலளித்தனர்.

jana nayagan vijay malayasia

விழாவில் விஜய் மேடைக்கு வந்ததுமே அரங்கமே அதிர்ந்தது. அவரது வழக்கமான ஸ்டைலில் ரசிகர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்த பிறகு பேச தொடங்கினார். ஜன நாயகன் படம் தனது சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான அத்தியாயம் என்பதை குறிப்பிட்ட விஜய், ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பாடிய பாடலும், மேடையில் ஆடிய டான்ஸும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இசையமைப்பாளர் அனிருத் லைவில் போட்ட மியூசிக் மற்றும் பாடல் அந்த தருணங்களை இன்னும் சிறப்பாக்கியது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையை நினைவூட்டும் பல ஹிட் பாடல்கள் இந்த விழாவில் இசைக்கப்பட்டன.

குட்டி ஸ்டோரி

ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே விஜய்யின் குட்டி ஸ்டோரி ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு அம்சம். இந்த விழாவிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நேற்று விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது, "ஒரு குட்டி ஸ்டோரி சொல்லலாமா?" என்று விஜய் கேட்டபோது, அரங்கம் முழுவதும் உற்சாக குரல்கள் எழுந்தன.

அப்போது அவர் கூறிய கதையில், மழையில் கர்ப்பிணி பெண்ணுக்கு குடை கொடுத்து உதவும் ஆட்டோக்காரர், அந்த உதவி ஒரு சங்கிலி போல பலரிடம் சென்றுவிட்டு, இறுதியில் மீண்டும் அதே ஆட்டோக்காரரிடமே வந்து சேரும் சம்பவத்தை எடுத்துரைத்தார். இந்த கதையின் மூலம், "நாம் செய்யும் நல்லது எங்கேயும் போகாது, ஏதோ ஒரு வடிவில் நிச்சயம் திரும்பி வரும்" என்ற கருத்தை அவர் அழுத்தமாக சொன்னார்.

இந்த கதையின் மூலமாக விஜய் சொல்ல வந்த கருத்து என்னவென்றால், நாம் மற்றவர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு உதவியை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு படகு கொடுத்து உதவினால், அது நாளை பாலைவனத்தில் நீங்கள் சிரமப்படும்போது ஒட்டகமாக வந்து நிற்கும் என்று விஜய் தெரிவித்து இருக்கிறார்.

இந்த குட்டி ஸ்டோரி ரசிகர்களை மட்டுமல்ல, அரங்கில் இருந்த பலரையும் நெகிழ வைத்தது. சமூக வலைதளங்களில் இந்த பகுதி தனியாக வீடியோவாக வைரலாகி வருகிறது.

TVK கோஷம்

விஜய் குட்டி ஸ்டோரி சொல்லுவதற்கு முன்பு, ரசிகர்கள் திடீரென "TVK... TVK..." என்று கோஷமிடத் தொடங்கினர். இதைக் கேட்ட விஜய், சிரித்துக்கொண்டே, "வேண்டாம்ப்பா... கோபிச்சுக்கப் போறாங்க" என்று கூறிய பதில் அரங்கில் சிரிப்பலை ஏற்படுத்தியது. இந்த தருணமும் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் 'ஜன நாயகன்' படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகும் கடைசி திரைப்படம் என்பதால், இந்தப் படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மலேசியாவில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழா, அந்த எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. விஜய்யின் பேச்சும், அவரது குட்டி ஸ்டோரி சொல்லும் பாணியும், ரசிகர்களுடன் கொண்ட நெருக்கமும், 'ஜன நாயகன்' படம் வெறும் ஒரு திரைப்படம் அல்ல; ஒரு உணர்ச்சி பயணம் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே உறுதியாக பதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+