ரூ.180 கோடி கடனில் விழுந்த கமல் ஹாசன்.. தலைவர் 173 படத்துக்காக ஒரே அவசரம்! மன உளைச்சலில் சுந்தர் சி?
சென்னை: கமல் தயாரிப்பில், ரஜினி நடிக்கும் "தலைவர் 173" படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், மூத்த இயக்குநரான சுந்தர் சி, மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.. ரஜினி, கமலை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என்று பலரும் ஏங்கும் நேரத்தில், தனக்கு கிடைத்த வாய்ப்பை உதறிதள்ளி விட்டு செல்கிறார் என்றால் எந்த அளவுக்கு மனவேதனை அடைந்திருப்பார்? என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, 3 லைனில் கதையை ரஜினியிடம் சுந்தர் சி சொல்ல, அந்த கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை..

35 படங்களை வெற்றிப்பட இயக்குநர் சுந்தர் சி.. 27 வருடங்களுக்கு முன்பே அருணாசலம், 22 வருடங்களுக்கு முன்பே கமலை வைத்து படம் எடுத்த இயக்குனர்.. பல படங்களில் தொடர்ந்து இயக்கி பிஸியாகவே உள்ளார் மூத்த இயக்குநர் சுந்தர் சி.
தலைவர் 173
கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சுந்தர் சி இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.. ஆனால், கதை என்னவென்றே முடிவு செய்யாமல் இந்த அறிவிப்பு வெளியானதா? கதை இல்லாமல் டைரக்டரை முடிவு செய்தார்களா? அவசர அவசரமாக படம் பற்றின அறிவிப்பை அறிவிக்க வேண்டிய தேவை என்ன? என்றெல்லாம் தெரியவில்லை.
தன்னுடைய பிறந்தநாளின்போது, கடந்த 7ம் தேதியே படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் கமல் பிடிவாதமாக இருந்தாராம். ஆனால், கதை முடிவாகாமல், இந்த புராஜெக்ட்டும் முழுமையடையாமல், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை உள்ள நிலையில், திடீரென இந்த அறிவிப்பு வெளியானதில், ரஜினி, சுந்தர் சி-க்கு இதில் விருப்பம் இல்லையாம்.
ரூ.180 கோடி கமலுக்கு கடன்
தக் லைஃப் படத்தில் கமல், 180 கோடி ரூபாய் நஷ்டமடைந்துவிட்டார்.. கடன் நெருக்கடி கமலுக்கு அதிகமாகிவிட்டது. எனவே உடனடியாக தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்தால்தான், கடன்காரர்களின் வாயடைக்க முடியும் என்பதால், உடனடியாக 7ம் தேதி தன் படத்தை அறிவிக்க வேண்டியதாயிற்று.
ரஜினி, கமல் இணைந்து நடிக்க போவதாகவும், ராஜ்கமல் தயாரிப்புக்காக தன்னுடைய தேதிகளை ரஜினி தந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அப்படியானால் ரஜினி, கமல் இணைந்து நடிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
தயாரிப்பாளர் கமல்
இதற்கு பிறகுதான், கடந்த 15 நாட்களாக கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக செய்திகள் வரத்துவங்கின.. இதற்கு காரணம், தன்னுடைய நீண்ட நாளைய நண்பர் கமல் என்பதாலும், கடனாளி ஆகிவிட்டதாலும், அவருக்கு உதவி செய்வதற்காக தேதி தந்துள்ளாராம். எனினும், கேமியோ ரோலில் கமல் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.
அந்தவகையில் இந்த ரஜினி படத்தை பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்பதே கமலின் எண்ணமாக உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பொருத்தமாக சுந்தர் சி இருப்பார் என்பதும் கமலின் சாய்ஸ் ஆகும்.. ஒரு தயாரிப்பாளராக கமலின் இந்த சாய்ஸ் சரிதான்..
ஆனால் இயக்குநருக்கு என்ன பிரச்சனை உள்ளது? என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.. இந்த படத்தில் இயக்குநரை கமிட் செய்துவிட்டுதான் சம்பள பேசப்பட்டுள்ளது.
சங்கடத்தில் சுந்தர் சி
இப்போது வந்த புது இயக்குநர்களுக்கு அதிக சம்பளம் தருவதால், தனக்கும் ஒரு பெரிய தொகையை சுந்தர் சி கேட்டதாக தெரிகிறது. ஆனால், சம்பள விஷயத்தில் உரிய மரியாதை தரப்படவில்லையோ? என்ற எண்ணம் சுந்தர்சிக்கு எழுந்துள்ளது. மேலும் தான் சொன்ன கதைகள், ரஜினிக்கு பிடிக்காததால், சங்கடமாக உணர்ந்த சுந்தர்.சி, மேக்கிங் நேரத்தில் வெளியேறுவதைவிட, இப்போதே புராஜெக்ட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
மனவேதனையில் சுந்தர் சி
ஆனால் மூத்த இயக்குநரான சுந்தர் சி, மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.. ரஜினி, கமலை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என்று பலரும் ஏங்கும் நேரத்தில், தனக்கு கிடைத்த வாய்ப்பை உதறிதள்ளி விட்டு செல்கிறார் என்றால் எந்த அளவுக்கு மனவேதனை அடைந்திருப்பார்?
மன அழுத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றாலும், இந்த விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து ஆலோசித்து, அப்போதும் சுமூக முடிவு எட்டப்படாத பட்சத்தில், படத்திலிருந்து வெளியேறியிருக்கலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications