Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Review: ஆபாசம் இல்லாத, மிரட்டலான ஹாரர் சீரிஸ் பார்க்கணுமா? அப்போ "கரு வனம்” பாருங்க.. கதை இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலங்களில் தமிழ் வெப் சீரிஸ் உலகில் பல சீரிஸ்கள் வெளியாகி வந்தாலும், உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புகள் மிகக் குறைவு. அந்த வரிசையில், யூடியூப் தளத்தில் இலவசமாக வெளியாகி, மெதுவாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வெப் சீரிஸ் தான் "கரு வனம்". அந்த சீரிஸ் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இந்த வெப் சீரிஸ் ஆரம்பமே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. கதையின் தொடக்கத்தில், 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப்படும் இரண்டு கொடிய ராட்சச சகோதரிகள் பற்றிய மர்மமான பின்னணி காட்டப்படுகிறது. இந்த முன்னுரை, சீரிஸின் மையமாக இருக்கும் அமானுஷ்ய கதைக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

Karu Vanam Web Series Review YouTube

அடுத்த காட்சியில், ஒரு பெண் தனது இரண்டு பெண் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஒரு அநாதை இல்லத்திற்கு ஓடி வருகிறார். அங்கே இருக்கும் பெண்ணிடம் அந்த இரட்டை குழந்தைகளை ஒப்படைத்து, "இவங்க என்னோட குழந்தைங்க. இவங்களை பத்திரமா பாத்துக்கோங்க. இவங்க பேரு ஷாலினி, மீரா" என்று கூறுகிறார். ஆனால் அந்தக் காட்சி முடிவடையுமுன், "அவ என்னைய தேடி வந்துட்டா. என் குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க" என்று அலறிக்கொண்டே அந்த அநாதை இல்லத்தை விட்டு வெளியே ஓடுகிறார். இந்த ஒரு காட்சியே தொடரின் மைய மர்மத்தை மிக அழுத்தமாக முன்வைக்கிறது.

வருடங்கள் செல்கின்றன. அந்த இரட்டை குழந்தைகள் 10 வயதான பிறகும், அவர்களின் தாய் அவர்களைப் பார்க்க வருவது ஆண்டிற்கு ஒரே ஒரு முறை, அவர்களின் பிறந்த நாளில் மட்டுமே. அப்போதும் அந்த சந்திப்பு நீடிக்காமல், மீண்டும் அதே பயம், அதே அலறல், அதே ஓட்டம். இந்த நிகழ்வுகள், அந்த பெண் எதோ ஒரு மர்ம சக்தியால் தொடர்ந்து துரத்தப்படுகிறாள் என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறது.

Karu Vanam Web Series Review YouTube

காலம் மேலும் நகர்கிறது. இரட்டை சகோதரிகள் வளர்ந்து பெரிய பெண்களாகிறார்கள். அவர்களில் ஒருவருக்கு திருமணம் ஆகி, கணவன் மற்றும் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை அமைகிறது. அந்த சமயத்தில், அவர்களின் தாய் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, அவளின் பூர்வீக வீடு இந்த இரட்டை சகோதரிகளுக்கு சொந்தமாக கிடைக்கிறது.

அந்த பூர்வீக வீடு, சாதாரண வீடு அல்ல. கிட்டத்தட்ட ஒரு சிறிய அரண்மனை போல பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. அந்த வீட்டில், இரட்டை சகோதரிகள் தங்களின் குடும்பத்துடன் குடியேறுகிறார்கள். குடியேறிய பிறகே, அவர்களின் வாழ்க்கையில் தொடர்ச்சியாக அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அந்த வீடு, அந்த வரலாறு, அந்த மர்மம் - அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, கதையை இன்னும் ஆழமாக நகர்த்துகிறது.

Karu Vanam Web Series Review YouTube

இந்த நிலையில், கதையில் பல கேள்விகள் எழுகின்றன. அந்த இரட்டை சகோதரிகளின் தாய் உண்மையில் யார்? அவள் ஏன் இவ்வளவு பெரிய வீட்டை விட்டு விட்டு, தனது குழந்தைகளை அநாதை இல்லத்தில் விட்டுச் சென்றாள்? அவளை தொடர்ந்து துரத்திய "அவள்" யார்? 500 ஆண்டுகளுக்கு முன்பு காட்டப்படும் ராட்சச சகோதரிகளுக்கும், இன்றைய கதைக்கும் என்ன தொடர்பு? அந்த இரட்டை சகோதரிகள் தங்களைச் சூழ்ந்துள்ள அமானுஷ்ய ஆபத்திலிருந்து தப்பித்தார்களா? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் தான் "கரு வனம்" வெப் சீரிஸின் மையம்.

இதற்கு மேல் விவரித்தால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால், மீதியை பார்வையாளர்களே கண்டறிய வேண்டும். "கரு வனம்" பற்றி முக்கியமாக சொல்ல வேண்டியது அதன் இயக்கத் தரம். இப்போது இருக்கும் சீரியல் இயக்குநர்கள் மட்டுமல்ல, திரைப்பட இயக்குநர்களும் கூட, ஒரு ஹாரர்-மிஸ்டிரி கதையை எவ்வாறு திரையில் சொல்ல வேண்டும் என்பதை இந்த வெப் சீரிஸை பார்த்து கற்றுக்கொள்ளலாம் என்ற அளவிற்கு, இது நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

சத்தம், அதிரடி ஜம்ப் ஸ்கேர் ஆகியவற்றை நம்பாமல், சூழ்நிலையால் பயத்தை உருவாக்கும் முயற்சி இதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸில் மொத்தம் 12 எபிசோட்கள் உள்ளன. அனைத்தும் யூடியூபில் இலவசமாக கிடைக்கின்றன. மேலும், எந்தவிதமான ஆபாச காட்சிகளும் இல்லாததால், குடும்பத்துடன் கூட தைரியமாக பார்க்கக்கூடிய ஒரு தொடராக இது அமைந்துள்ளது.

Ayyana Mane Review: கன்னடத்தின் முதல் வெப் சீரிஸ்
ஒரு எபிசோடு பார்த்தாலே, அடுத்தடுத்து அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவது இதன் பெரிய பலமாகும். மொத்தத்தில், தரமான தமிழ் ஹாரர்-மிஸ்டிரி வெப் சீரிஸ் ஒன்றை தேடுபவர்களுக்கு "கரு வனம்" ஒரு சிறந்த தேர்வு. கதை, திரைக்கதை, மர்மம் மற்றும் அமானுஷ்ய சூழல் ஆகிய அனைத்தையும் சமநிலையாக கையாளும் இந்த தொடர், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படைப்பாக திகழ்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+