Karuppu Day 1 Box Office:“கருப்பு” முதல் நாள் வசூல் என்ன? லீக்கான தகவல்.. சூர்யாவின் கம்பேக் ஹிட்!
சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆஃபிஸில் வலுவான தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படம், ஆரம்பத்தில் மே 14ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தாலும் சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக ஒரு நாள் தாமதமாக வெளியானது.

சூர்யாவின் கம்பேக்
சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஹிட் கிடைக்காத நிலையில், இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், "கருப்பு" திரைப்படம் மாஸ் மற்றும் மெசேஜ் கலந்த கதையுடன் உருவாகியுள்ளது. சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டு, சூர்யா சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரிஷாவின் நடிப்பு
படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருப்பதுடன், அவரது கேரக்டர் கதைக்கு எமோஷனல் திருப்பத்தை கூட்டுகிறது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது வழக்கமான ஸ்டைலில் சமூக கருத்துக்களையும், பொழுதுபோக்கையும் இணைத்து திரைக்கதை அமைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
படம் வெளியான முதல் நாளிலேயே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திரண்டது. பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் காணப்பட்டதுடன், சூர்யாவின் மாஸ் சீன்கள் மற்றும் கிளைமாக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு "வெற்றி சூர்யா"வை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருப்பு பாக்ஸ் ஆபீஸ்
இந்நிலையில், பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, "கருப்பு" திரைப்படம் இந்தியாவில் முதல் நாளிலேயே சுமார் ₹16.66 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ₹4 கோடி வசூலித்துள்ள நிலையில், மொத்தமாக உலகளவில் ₹20.66 கோடி வசூலை படம் எட்டியுள்ளது. இது சூர்யாவின் சமீபத்திய படங்களில் மிகச் சிறந்த ஓப்பனிங்காக கருதப்படுகிறது.
படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், விடுமுறை நாட்கள் தொடங்கியுள்ளதாலும், அடுத்த சில நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் "கருப்பு" திரைப்படம் நீண்டநாள் ஓட்டத்தில் பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருப்பு திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சில காரணங்களால் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அதிகமாக அதிருப்தி அடைந்தனர். அப்போது ஆர்.ஜே பாலாஜி கண்கலங்கி அழுதபடி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் நேற்று படம் வெளியான பிறகு ஆர்.ஜே பாலாஜி எதற்காக அழுதார் என்று இப்போதுதான் தெரிகிறது இப்படி ஒரு படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தள்ளிப்போகிறதே என்று அழுது இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் சூர்யாவிற்கு ஆர்.ஜே பாலாஜி சரியான கம்பேக் கொடுத்துவிட்டார், இவ்வளவு நாள் எங்க இருந்த தல என்றெல்லாம் ஆர் ஜே பாலாஜி பற்றி ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications