Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mask Review: கவின் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு பிக் பாஸ்ல இருந்து வந்து சினிமால தனக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்ச கவின் நடித்த புதிய படம் பற்றித்தான் இப்போ பார்க்க போறோம். லிப்ட், டாடானு கவின் தேர்ந்தெடுத்த படங்கள் அவருக்குப் பெரிய வரவேற்பைக் கொடுத்துச்சு. அந்த வரிசையில் மாஸ்க் படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

கவின் நடிப்பில் சமீபத்தில் வந்த 'பிளடி பெக்கர்' மட்டும் எதிர்பார்த்த அளவுக்குப் போகலை. ஆனா, இன்று (நவம்பர் 21, 2025) வெளியாகியிருக்கிற 'மாஸ்க்' படம் கவின் மீண்டும் ஒரு தடவை திரும்பிக் கொடுக்கப் போறார் ன்னு நினைக்கத் தோணுது. விகர்ணன் அசோக் இயக்கத்துல உருவான இந்தப் படத்துல கவினுடன் நடிகை ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்துல் நடிச்சிருக்காங்க.

Kavin Andrea

மாஸ்க் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைச்சிருக்கார். டீசர், டிரெய்லர் எல்லாமே ரசிகர்கள் கிட்ட நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் இன்னிக்குத் திரையரங்கில் வந்து விமர்சனங்கள் குவியத் தொடங்கியிருக்கு. இந்த படத்துக்கு வெற்றிமாறன் ஆலோசகரா இருந்தார் ன்னு அறிவிச்சிருந்தாலும், படம் பார்க்கும்போது நெல்சன் தான் கவின் படத்துக்காகப் பல ஐடியாக்களைக் கொடுத்திருப்பார் என்று தோணுது. அந்தளவுக்கு டார்க் ஹியூமர் காட்சிகளும், காமெடிகளும் சரியா பொருந்தியிருக்கு.

மாஸ்க் கதை

மாஸ்க் திரைப்படம் ஒரு மர்ம - திரில்லர் படமா உருவாகியிருக்கு. அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) வரும் தேர்தல்ல ஜெயிக்கிறதுக்காகப் பணத்தைக் கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்குறதா சொல்லி வலம் வர்ற பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறார்.

கொள்ளைக்காரன் கவின்

அப்போ, தனியார் துப்பறிவாளரா கோல்மால் வேலைகளைச் செஞ்சு பணம் சம்பாதிச்சுட்டு வர்ற வேலு (கவின்) எப்படி இந்தக் கொள்ளை வலையில சிக்குறார், எல்லாப் பிரச்சனைகளையும் சரி செஞ்சாரா, இல்லையா என்பதுதான் மாஸ்க் படத்தோட கதை. படத்தோட ஆரம்பத்துலேயே இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவர்ல இடைவேளைக் காட்சியில பணம் கொள்ளையடிக்கப்பட்டது, ஆண்ட்ரியாகிட்ட கவின் எப்படிச் சிக்கினார், ஆண்ட்ரியா பவனிடம் எப்படிச் சிக்கியிருக்காங்க என்பதைச் சொல்லிட்டுப் படத்துக்குள்ள போற இடம் ரொம்பச் சிறப்பா இருக்கு.

கவின் அந்த மாஸ்க் அணிந்த முகமூடித் திருடன் இல்லங்கிற நிலையில், கடைசி வரைக்கும் அந்த மாஸ்க் மேன் யார், அவரோட கூட்டம் எதுக்காக இப்படிப் பல கோடி ரூபாய் கொள்ளையில் ஈடுபடுது என்பது கிளைமேக்ஸ்ல். தெரியவரும் இடம் ரொம்பச் சாமர்த்தியமா இருந்துச்சு. படத்தோட ஆரம்பத்தில் கவினை அறிமுகப்படுத்தும் விதம், இடைவேளையில சூப்பர் மார்க்கெட்ல மக்கள் கொள்ளையடிக்கும் காட்சி, இறுதிச் சண்டைக் காட்சி ன்னு நிறைய சுவாரஸ்யமான தருணங்களை இயக்குநர் எழுதி இயக்கியிருக்கார்.

ஜி.வி. பிரகாஷோட பின்னணி இசை படத்துக்குப் பெரிய பலம் சேர்த்திருக்கு. பிக் பாஸ் அர்ச்சனா வர்ற பகுதி மட்டும் 'டாக்டர்' படத்தை நினைவூட்டுது மற்றும் ரொம்பவே செயற்கையா இருக்கிற உணவைத் தருது. ரத்தத்துல வழுக்கி விழுந்து இறப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

Kavin Andrea

நடிகர்கள் பாராட்டு

கவின் 'மாஸ்க்' படத்துல தனது நடிப்புத் திறனுக்கு மேலும் ஒரு உயரத்தைக் கொடுத்திருக்கார் ன்னு பலரும் சொல்றாங்க. குறிப்பா, உணர்ச்சிக் காட்சிகள், பதட்டமும் மர்மமும் கலந்த பகுதிகள், நகைச்சுவை மற்றும் சண்டைக் காட்சிகள் எல்லாத்துலேயும் கவின் நல்லா நடிச்சிருக்கார்.

இளம் பெண்களைப் பாதுகாக்குற அன்னை தெரசா போல ஆரம்பத்துல காட்டப்பட்ட ஆண்ட்ரியாவோட இன்னொரு பக்கத்தைக் காட்டும்போது பயமே தொற்றிக்கொள்ளும் அளவுக்கு கடைசி வரைக்கும் அந்தப் பூமி கதாபாத்திரத்துல நிலைச்சு நடிச்சு ஸ்கோர் செஞ்சிருக்காங்க. தயாரிப்பாளராவும் இந்தப் படத்துல ஆண்ட்ரியா தன்னோட பங்கைச் செலுத்தியிருக்காங்க.

மொத்தத்துல தீர்ப்பு என்ன

'மாஸ்க்' படம் நிச்சயமா ரசிகர்களை ரசிக்க வைக்கும் படி இருக்கு. கோலிவுட்ல ஒரு மணி ஹெய்ஸ்ட் முயற்சியை மிடில் கிளாஸ் மக்களோட மனநிலையை மையப்படுத்திப் படமாக்கிய விதம் மற்றும் கடைசி வரைக்கும் என்ன நடக்கும்ங்கிற ஆர்வம் படத்தைப் பக்கான்னு பாராட்ட வைக்குது. கவினுக்குக் கண்டிப்பா இது கம்பக் தான். குடும்பத்தோட சேர்ந்து பார்க்கக் கூடிய வகையிலேயும் படம் இருக்கு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+