உள்ளாட்சித் தேர்தலுக்கு ரெடி? தமிழகத்தில் இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்! ரொம்ப கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தங்களது பெயர் இருக்கிறதா முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் ஒருவேளை பெயர் விடுபட்டிருந்தாலோ முகவரி மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலும் அதற்காக தனித்தனி விண்ணப்ப படிவங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் இதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 1ஆம் தேதியை மையமாகக் கொண்டு சிறப்பு சுருக்கு முறை திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது

Voter List Election Commission Archana Patnaik

தமிழக சட்டசபன்ற தேர்தலுக்கு முன்பு அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 179 வாக்காளர்கள் இருந்தனர்

இதில் 2 கோடியே 78 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 90 லட்சம் பெண் வாக்காளர்களும், 7,656 மூன்றாம் பாலினத்தவறும் இடம் பெற்று இருந்தனர். இதற்கிடையே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகும் புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. தமிழகத்தில் ஏற்கனவே எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு பிறகு தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

தற்போது எஸ்எஸ்ஆர் எனப்படும் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் தொடங்கப்பட உள்ளன. 2027 ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை திருத்தி அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் கடந்த 2ஆம் தேதியுடன் முடிவடைந்தன.

இதை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி வெளியிடுகிறார். தமிழகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும் பொதுமக்கள் தங்கள் பெயர் அதில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தாலும் அதை திருத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு இந்த விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28ஆம் தேதிக்குள் முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகு 2027 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+