போடு.. இனி இஷ்டத்துக்கு கார் வாங்க முடியாது! EV கார் தான் வாங்கனும்..அரசு ஊழியர்களுக்கு பறந்த ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சுற்றுச்சூழல் மாசு மற்றும் எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் இனி தங்கள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்காக பெட்ரோல், டீசல் கார்களை தவிர்த்து இனி மின்சார கார்களை மட்டுமே வாங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.

உலகம் முழுவதும் எரிபொருள் தேவைக்காக கச்சா எண்ணெய் இறக்குமதியை தான் பெரும்பாலான நாடுகள் நம்பியுள்ளன. இந்தியாவும் அப்படித் தான். ஈரான், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்து அவற்றை சுத்திகரித்து எரிபொருட்களாக இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Central Government Government Employees Electric Car

இதனால் எரிபொருள் தேவைக்காக பிற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டியதோடு, சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலருக்கு மாற வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்படுகிறது. அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மாசு, கார்பன் பயன்பாடு, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கார்பன் உமிழ்வு

அதுமட்டுமல்லாமல் 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு டார்கெட் வைத்துள்ளது. இதனை சாத்தியமாக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்கவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. தற்போதைய சூழலில் 90 % இறக்குமதி மூலமே கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

மின்சார கார்

ஏற்கனவே பல மத்திய அமைச்சர்கள் மின்சார காருக்கு மாறியுள்ள நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் கார்களை மின்சார கார்களாகவே இனி வாங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு

அரசு அலுவலகங்கள், அரசு உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் போது இது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு நம்புகிறது. இது தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய செலவீன துறை வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் கார்கள்

அதில் மத்திய அரசுத் துறைகள் அமைச்சகங்கள் அரசு ஊழியர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் டீசல் கார்கள் பழுதடைந்து மாற்றப்பட்டாலோ அல்லது பயன்பாட்டில் இருந்து அவற்றுக்கு ஓய்வு கொடுக்கும் போது மீண்டும் பெட்ரோல் டீசல் கார்களை வாங்குவதை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக மின்சார கார்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

ஹைபிரிட் கார்

ஒருவேளை பெட்ரோல் டீசல் கார்களைத்தான் வாங்க வேண்டும் என விரும்பினால் அதற்கான காரணங்களை விரிவாக விளக்கி திட்ட அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். 20 லட்சம் வரை மின்சார வாகனங்களை கொள்முதல் செய்வதற்கான கொள்முதல் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருட்களை பயன்படுத்தும் ஹைபிரிட் கார்களுக்கு இந்த வரம்பு 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வாகனங்களின் விலை அவற்றுக்கான பராமரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய செலவீனத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+